பந்தனா குமாரி | |
---|---|
தில்லி சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 8 திசம்பர் 2013 | |
முன்னையவர் | இரவீந்தர் நாத் பன்சால் |
தொகுதி | சாலிமார் பாக் சட்டமன்றத் தொகுதி |
தில்லி சட்டமன்றம் | |
பதவியில் 23 பிப்ரவரி 2015 – 4 சூன் 2016 | |
பின்னவர் | ராக்கி பிர்லா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சாலிமார் பாக்]] 11 மார்ச்சு 1974 சமஸ்திபூர், பீகார் |
இறப்பு | சாலிமார் பாக்]] |
இளைப்பாறுமிடம் | சாலிமார் பாக்]] |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | ஆம் ஆத்மி கட்சி |
பெற்றோர் |
|
கல்வி | பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கர் பீகார் பல்கலைக்கழகம், (இளங்கலை) |
பந்தனா குமாரி (Bandana Kumari) ஓர் இந்திய அரசியல்வாதியும் தில்லி சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் 2013 முதல் 2018 வரை சாலிமார் பாக் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். இவர் தில்லி சட்டமன்றத்தின் துணைச் சபாநாயகராகவும், ஆம் ஆத்மி கட்சியின் மகளிர் பிரிவின் முன்னாள் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.[1]
பந்தனா 11 மார்ச் 1974 அன்று பீகாரில் உள்ள சமஸ்திபூரில் பூமிகார் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் பிரஜ் கிசோர் சர்மா.[2] பீகார் மாநில பாடத்திட்டத்தின் கீழ் மாநில வாரியத்தின் கீழ் 1991-இல் முசாபர்பூரில் உள்ள இராம் பிரிச் பெனிபுரி பள்ளியில் மேல்நிலைக் கல்வியினை முடித்தார். பந்தனா 1994-இல் முசாபர்பூரில் உள்ள பாபாசாகேப் பீம்ராவ். அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இவரது கணவர் பெயர் சஜ்ஜன் குமார்.[3] இவர் இல்லத்தரசியாகவும்[4] சமூக சேவகியாகவும் உள்ளார். இவர் தனது கணவர், மகனுடன் தில்லி சாலிமார் பாக் பகுதியில் வசித்து வருகிறார்.[2][5]
திசம்பர் 2013-இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், பந்தனா குமாரி தில்லியில் உள்ள சாலிமார் பாக் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த பாரதிய ஜனதா கட்சியின் இரவீந்தர் நாத் பன்சாலை 10,651 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இவர் 47,235 வாக்குகள் பெற்றார். இந்தத் தொகுதி 1993 முதல் பாஜக வசம் இருந்தது. சாலிமார் பாக் 1993-இல் பாஜகவின் முதல்வர் சாகிப் சிங் வர்மாவின் தொகுதியாகவும் இருந்தது.[6]
பந்தனா ஆம் ஆத்மி கட்சியின் பெண்கள் பிரிவின் பிரிவின் தலைவரானார். நகரில் பெண்களின் பாதுகாப்பு குறித்த பிரச்சனைகளை எழுப்பினார். ஆம் ஆத்மியின் பெண்கள் பிரிவு மற்றும் இளைஞர் பிரிவு பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான 22 கிராமின் சேவா வாகனங்களை 2014 திசம்பரில் தில்லி மெட்ரோ நிலையங்களிலிருந்து பெண்களின் பாதுகாப்பு மற்றும் பெண் வாக்காளர்களைக் கவரும் வகையில் தொடங்கிவைத்தார். பந்தனா 2015ஆம் ஆண்டு தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் சாலிமார் பாக்கில் மீண்டும் போட்டியிட்டார்.
நிலைக்குழு துணைத் தலைவரான புது தில்லி மாநகராட்சி மன்ற உறுப்பினராக பாஜகவின் ரேகா குப்தாவை பந்தனா 10,978 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இவர் 2013 தேர்தல்களை விட அதிக வாக்குகள் (62,656) பெற்றார்.[7][8][9]
தில்லியில் மொத்தமுள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மி 67 இடங்களில் வெற்றி பெற்றது. 12 பிப்ரவரி 2015 அன்று தில்லியின் ஆறாவது சட்டப் பேரவையின் துணை சபாநாயகர் பதவிக்கு பந்தனா குமாரி வேட்பாளராக இருப்பார் என்று அறிவித்தது.[10] பிப்ரவரி 23 அன்று, இவர் முறையாக துணை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டப்பேரவைத் தலைவராக ராம் நிவாஸ் கோயல் பொறுப்பேற்றார்.[11]