பந்தளம் (Pandalam, പന്തളം) என்பது கேரளத்தில் பத்தனம்திட்டா மாவட்டம், அடூர் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இந்தியாவில் உள்ள கேரளத்தில், மிகவும் விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் பந்தளம் ஒன்றாகும். அது ஒரு புனிதமான ஊராக மக்களால் கருதப்படுகிறது. மத்திய திருவிதாங்கூரில் நிலை கொண்ட பந்தளம், கல்வி மற்றும் உடல் நல மையங்களுக்குப் பெயர் போனதாகும். தரம் வாய்ந்த பள்ளிக்கூடங்கள் மற்றும் பட்டப் படிப்பு, மேற்படிப்பு, பயிற்சி, ஆயுர்வேதம், பொறியியல் கல்லூரிகள் போன்ற அனைத்து கல்வி நிலையங்களும் நிறுவனங்களும் இங்கு அமையப்பெற்றுள்ளன.
தலபுராணத்தின் படி, சபரிமலையில் குடிகொண்டிருக்கும் இறைவனான சுவாமி ஐயப்பன் மண்ணுலகத்தில் பந்தள மகாராஜாவின் மகனாக தற்காலிகமாக வாழ்ந்து வந்தார். இதன் காரணமாக சபரிமலைக்கு பக்தர்கள் வரும் காலங்களில், பந்தளத்தில், பந்தள மகாராஜாவின் அரண்மனைக்கு அருகே குடிகொண்டிருக்கும் வலியகோயிக்கல் ஆலயத்திற்கு பெரும் அளவில் வருகை தந்து, அங்கே இருக்கும் இறைவனை பக்தியுடன் தொழுகின்றனர். இந்த ஆலயமானது அச்சன்கோவில் ஆற்றோரத்தில் குடிகொண்டுள்ளது. மகரவிளக்கு திருவிழா நடைபெறுவதற்கு மூன்று நாள் இருக்கும் பொழுது, சுவாமி அய்யப்பனுக்கு சொந்தமான புனிதமான ஆபரணங்களை (திருவாபரணம் என்று அறியப்படுவது) பந்தளத்தில் இருந்து சபரிமலைக்கு கொண்டு செல்லும் வழக்கம் இன்றும் இருந்து வருகிறது.
பந்தளத்தில் காணப்படும் இதர புண்ணிய தலங்களானவை:
தமிழ் நாட்டை ஆண்டு வந்த பாண்டிய மன்னர்களில் சிலர் போரில் தோல்வி அடைந்ததால் ஊரை விட்டு ஓடிவந்ததாகவும், இங்கே இருந்த நில உரிமையாளர்களில் ஒருவரான கைப்புழா தம்பனிடம் இருந்து இங்கு நிலம் வாங்கியதாகவும், ஐதீகங்கள் கூறுகின்றன. மேற்கு மலைத்தொடர்களின் இரண்டு பக்கங்களிலும் இருந்த ராஜ்ஜியங்கள் பாண்டிய அரசரின் ஆட்சியில் இருந்துவந்தது. பந்தளத்தின் மகாராஜா மார்த்தாண்ட வர்மா என்ற அரசன் காயம்குளம் இராஜ்ஜியத்தை கைப்பற்ற உதவினார். இந்த உதவிக்கு கைமாறாக, மார்த்தாண்ட வர்மா தனது சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்திய பொழுது, பந்தளத்தின் மீது படையெடுத்து அதையும் தன சாம்ராஜ்ஜியத்துடன் இணைக்க விரும்பவில்லை. ஒரு காலகட்டத்தில் பந்தள மகாராஜாவின் தர்பார் இடுக்கி மாவட்டத்திலுள்ள தொடுபுழா என்ற இடம் வரை பரந்து விரிந்திருந்தது. 1820 ஆண்டில் பந்தளம் திருவிதாங்கூறுடன் இணைக்கப்பட்டது.
மத்திய திருவிதாங்கூறில் காணப்படும் குருந்தோட்டயம் சந்தை, பல நூற்றாண்டுகளாக புழக்கத்தில் இருந்துவந்தது, (தற்பொழுது பந்தளம் சந்தை என அறியப்படுவது) வேளாண் பொருட்களுக்கான மிகப்பெரிய மற்றும் புகழ்பெற்ற சந்தையாகும். 1990 ஆண்டுகளின் இறுதிவரை இந்த பட்டிணத்தின் நடுவில் செயல்பட்டுவந்த இந்த சந்தை, ஆட்பெருக்கம் காரணமாக மற்றும் மேலும் வசதிகள் வழங்குவதற்காக, பந்தளம் மற்றும் மாவேலிக்கரையை இணைக்கும் சாலையில் அமைந்த ஒரு விரிவான இடத்திற்கு, நாளடைவில் மாற்றப்பட்டது. பந்தளம் இப்பொழுது, போதிய வசதிகளுடன், நாட்டிலுள்ள இதர அனைத்து நகரங்களுடன் நன்றாக இணைக்கப்பட்ட, மிக முக்கியமான மற்றும் நவீனமயமாக்கப்பட்ட முதன்மை நகரமாகும்.
பந்தளம் ஒரு பஞ்சயத்து மற்றும் ஒரு சட்டப் பேரவைத் தொகுதியாகும். இந்த பஞ்சாயத்து ஒரு முறை முனிசிபாலிட்டியாக மாற்றப்பட்டது பின்னர் திரும்பவும் பஞ்சாயத்தாக மாற்றப்பட்டது. பத்தனம்திட்ட மாவட்டம் துவங்குவதற்கு முன்பு, பந்தளம் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள மாவேலிக்கரை வட்டத்தை சார்ந்து இருந்து வந்தது. கேரளத்தில் அமைந்துள்ள அனைத்து பெரிய அரசியல் கட்சிகளும் இங்கே பந்தளத்தில் வலுவாக செயல்பட்டு வருகின்றன. இங்கிருப்போர் பொதுவாக எல்டிஎப் கட்சியை சார்ந்த வாக்காளர்களை பேரவைக்கு தெரிவு செய்து கொண்டிருந்தனர். சமீபத்தில் நடந்த பேரவைக்கான தேர்வில், பந்தளத்தில் யுடிஎப் கட்சி வெற்றி பெற்றுள்ளது.பந்தளத்தின் மேலவை தொகுதி 2011 ஆண்டிற்கான பேரவை தேர்தலில் கைவிடப்படும். பந்தளம் தற்பொழுது பத்தனம்திட்ட லோக் சபா தொகுதியின் ஒரு அங்கமாகும்.
சாலை, இரயில் மற்றும் வான்வழியில் பந்தளம் அடைவதற்கான வழிகளும், தூரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
* கேரளத்தின் தலைநகரமான திருவனந்தபுரத்தில் இருந்து, வடக்கே 105 கிலோமீட்டர் தொலைவில் * கொச்சி, கேரளாவின் வணிக தலை நகரத்தில் இருந்து தெற்கே 120 கிலோமீட்டர் தொலைவில் * கோட்டயத்தில் இருந்து 51 கிலோமீட்டர் தெற்கே
• செங்கன்னூர் இரயில் நிலையத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் • மாவேலிக்கர இரயில் நிலையத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் • காயம்குளம் இரயில் நிலையத்தில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவில்
• திருவனந்தபுரம் சர்வதேச விமான தளத்தில்இருந்து 119 கிலோமீட்டர் தொலைவில் • கொச்சி சர்வதேச விமான தளத்தில்இருந்து 140 கிலோமீட்டர் தொலைவில்
• பந்தளம் கேரள வர்மா - கவி • பந்தளம் கே. பி.-கவி • எம்.என்.கோவிந்தன் நாயர் - அரசியல்வாதி • பந்தளம் பி. ஆர்.- அரசியல்வாதி • பி. கே. மந்த்ரி - கேலிச் சித்திர ஓவியர் • வி.எஸ்.வலியதன் - கலைஞர் (ராஜா ரவி வர்மா விருது பெற்றவர்) • கடம்மனிட்ட வாசுதேவன் பிள்ளை - படையணி கலையில் வித்தகர், வினைஞர் • பந்தளம் சுதாகரன் - அரசியல்வாதி, முன்னாள் கேரள அரசின் ஆய அமைச்சர் • பந்தளம் பாலன் - பாடகர்.
• பந்தளம் பிரவசி அச்சொசியேசன் ஷர்ஜாஹ் மற்றும்; நோர்தேர்ன் எமிரேட்ஸ் • பந்தளம் பிரவசி அச்சொசியேசன், துபாய், யுஏஈ புகைப்பட தொகுப்பு
[1] பத்தனம்திட்ட மாவட்டத்தில் காணப்படும் ஊர்கள் மற்றும் நகரங்கள்.
[2