பந்தளம் சுதாகரன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் | |
---|---|
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 22 நவம்பர் 1955 பந்தளம் |
துணைவர் | அஜிதா |
பந்தளம் சுதாகரன் (Pandalam Sudhakaran) (பிறப்பு 22 நவம்பர் 1955, பந்தளம், கேரளா, இந்தியா) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர், இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். வாண்டூர் தொகுதியிலிருந்து காங்கிரசு கட்சி வேட்பாளராக 1982இல் முதல் முறையாக கேரள சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1982, '87 , '91இல் மீண்டும் அதே தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் தற்போது திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார். இவர் அஜிதா என்பவரை மணந்தார் . இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இவர் காந்திஜி பல்கலைக்கழக ஆட்சிக் குழு, காலிகட் பல்கலைக்கழக ஆட்சிப்பேரவை, கேரள பிரதேச காங்கிரசு குழு நிர்வாகி, திருவனந்தபுரம் தூர்தர்ஷன் கேந்திரா ஆலோசனை வாரிய உறுப்பினராகவும் இருக்கிறார். இவர் கேரள மாநில திரைப்பட விருது குழுவில் நடுவர் உறுப்பினராக இருந்தார். மேலும், கேரள மாநிலத் திரைப்பட மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநராகவும் இருந்தார். கேரள பிரதேச காங்கிரசு குழுவின் பொதுச் செயலாளர்,[5] கேரளா சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர்,[6] ஜெய்ஹிந்த் தொலைக்கட்சியின் இயக்குநர்,[7] மலையாளத் திரையுலக தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் துணைத் தலைவர், கேரளா கலாமண்டலத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர், கேரள பிரதேச காங்கிரசு குழு செய்தித் தொடர்பாளர் (2013 முதல் ) போன்ற பதவிகளையும் வகித்து வருகிறார்.