பந்தாய் புதிய விரைவுச்சாலை New Pantai Expressway Lebuhraya Baru Pantai | |
---|---|
வழித்தடத் தகவல்கள் | |
நீளம்: | 19.6 km (12.2 mi) முதன்மை வழி: 14.0 km (8.7 mi) சாலாக் இணைப்பு: 5.6 km (3.5 mi) |
பயன்பாட்டு காலம்: | 2000 – |
வரலாறு: | கட்டுமான முடிவு: 2004 |
முக்கிய சந்திப்புகள் | |
தென்மேற்கு முடிவு: | பெர்சியாரான் தூஜுவான், சுபாங் ஜெயா சிலாங்கூர் |
பெர்சியாரான் கெவாஜிப்பான்
B11 கிள்ளான் லாமா | |
வடகிழக்கு முடிவு: | பங்சார் சாலை, பங்சார், கோலாலம்பூர் |
அமைவிடம் | |
முதன்மை இலக்குகள்: | சுபாங் ஜெயா, பண்டார் சன்வே, பெட்டாலிங் ஜெயா, கூச்சாய் லாமா, பந்தாய் டாலாம், பங்சார், கோலாலம்பூர் |
நெடுஞ்சாலை அமைப்பு | |
பந்தாய் புதிய விரைவுச்சாலை (ஆங்கிலம்: New Pantai Expressway; அல்லது NPE; மலாய்: Lebuhraya Baru Pantai) என்பது தீபகற்ப மலேசியாவின் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள கூட்டரசு விரைவுச்சாலை ஆகும். 19.6-கிலோமீட்டர் (12.2-மைல்) நீளம் கொண்ட இந்த விரைவுச்சாலை, சிலாங்கூரின் தென்மேற்குப் பகுதியில், சுபாங் ஜெயாவிற்கு அருகில் உள்ள மலேசிய கூட்டரசு நெடுஞ்சாலைக்கு இணையாகச் செல்கிறது. அதே வேளையில், வட கிழக்கில் பங்சார் பகுதியில் தொடங்குகிறது.[1][2]
இந்த விரைவுச்சாலை, சுபாங் உத்தாமா சாலை (ஆங்கிலம்: Jalan Subang Utama; மலாய்: Persiaran Tujuan–PJS), கிள்ளான் லாமா சாலை (Jalan Klang Lama); பந்தாய் டாலாம் சாலை (Jalan Pantai Dalam) எனவும் முன்பு அறியப்பட்டது.[3]
இந்தச் சாலை 2000 - 2004-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்டது. கட்டுமானப் பணியின் போது, 2,000 குடியேற்றவாசிகளைத் தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்களுக்காக 980 குறைந்த விலை அடுக்குமாடி குடியிருப்புகள்; அவர்களின் பழைய குடியிருப்புகளுக்கு அருகிலேயே கட்டப்பட்டுத் தரப்பட்டன.
இந்த விரைவுச்சாலை 30 ஏப்ரல் 2004 அன்று திறக்கப்பட்டது. சனவரி - நவம்பர் 2007-க்கு இடைப்பட்ட காலத்தில் சன்வே பிரமிட் வாகன நிறுத்த தளத்திற்கு ஒரு சிறப்புச் சரிவுப் பாதை கட்டப்பட்டது. இது டிசம்பர் 2007-இல் திறக்கப்பட்டது.
பெட்டாலிங் ஜெயா செலாத்தான் குடியிருப்புப் பகுதியில் வசித்த 50 குடியிருப்பாளர்கள், பந்தாய் புதிய விரைவுச்சாலையின் கம்போங் டத்தோ அருண் சுங்கச் சாவடியில் அமைதிப் பேரணியை நடத்தினர். அந்தச் சுங்கச்சாவடிக்கு அருகில் வசிக்கும் மக்களுக்கு, குறிப்பாக அருகிலுள்ள குடியிருப்பாளர்களுக்கு சுங்கவரி ஒரு சுமையாக இருப்பதால் சுங்கவரியை நிறுத்தம் செய்யக் கோரி பேரணியை நடத்தினர்.
அந்தப் பகுதியில் வாழ்ந்த குடியிருப்பாளர்கள், மாதத்திற்கு சராசரியாக RM 500 ரிங்கிட், கம்போங் டத்தோ அருண் சுங்கச்சாவடிக்கு மட்டும் செலவிட வேண்டியிருப்பதாகக் கண்டனம் தெரிவித்தனர்.
டத்தோ அருண் சுங்கச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் அவர்களின் வீடுகள் அமைந்திருந்தாலும், அவர்கள் ஒவ்வொரு முறையும் RM 1 ரிங்கிட் 60 சென் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும்.[4]
கோலாலம்பூருக்குச் செல்வதற்கு மாற்று வழி இல்லாததால், அங்குள்ள மக்கள் அடிக்கடி பணம் செலுத்த வேண்டிய கட்டாயத்திதிற்கு உள்ளானார்கள். குடியிருப்பாளர்களின் புகார்களைத் தொடர்ந்து, 13 பிப்ரவரி 2009 அன்று, கோலாலம்பூருக்குச் செல்லும் PJS 2 சுங்கச்சாவடியில் கட்டண முறை நிறுத்தப்பட்டது. இது அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் செய்யப்பட்டது[5]