தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | பந்துல வர்ணபுர | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | இரம்புக்கணை, இலங்கை | 1 மார்ச்சு 1953|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இறப்பு | அக்டோபர் 18, 2021 கொழும்பு, இலங்கை | (அகவை 68)|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலக்கை நடுத்தர | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பன்முக வீரர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உறவினர்கள் | உபாலி வர்ணபுர (சகோ), மாதவ வர்ணபுர (மகன்), மலிந்த வர்ணபுர (மருமகன்) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 10) | 17 பெப்ரவரி 1982 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 17 செப்டம்பர் 1982 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 11) | 7 சூன் 1975 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 26 செப்டம்பர் 1982 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1990–1991 | புளூம்ஃபீல்டு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நடுவராக | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கின்ஃபோ, 31 சனவரி 2009 |
பந்துல வர்ணபுர (Bandula Warnapura, மார்ச் 1, 1953 – 18 அக்டோபர் 2021), முன்னாள் இலங்கைத் துடுப்பாட்ட வீரரும், இலங்கைத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவரும் ஆவார். இவர் 1975 முதல் 1982 வரை 4 தேர்வுப் போட்டிகளிலும், 12 பன்னாட்டு ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இவர் வலக்கை ஆரம்பத் மட்டையாட்டம், வலக்கை நடுத்தர வேகப் பந்து வீச்சாளரும் ஆவார்.
வர்ணபுர இலங்கையின் முதலாவது தேர்வுப் போட்டியைத் தலைமை தாங்கி நடத்தினார். முதல் தேர்வுப் போட்டியின் முதல் பந்தை எதிர்கொண்டு இலங்கைக்கான முதலாவது தேர்வு ஓட்டத்தை எடுத்தார்.[1] இவர் 4 தேர்வுப் போட்டிகளில் தலைமை தாங்கியிருந்தாலும், எப்போட்டியையும் வெல்ல முடியவில்லை. ஆனாலும், இவர் தலைமை தாங்கிய முதலாவது ஒருநாள் போட்டி இலங்கைக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தது.
இலங்கை அணியின் பயிற்சியாளராக பந்துல பணியாற்றினார். அத்துடன், அதன் நிர்வாகத்திற்கும் தலைமை தாங்கினார். இவர் ஆசியத் துடுப்பாட்ட அவையின் அதிகாரியாகவும் பணியாற்றினார்.[2]
2021 அக்டோபரில், நீரிழிவு நோய் காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, இவரது இடது காலை நீக்க வேண்டியிருந்தது[3] 2021 அக்டோபர் 18 இல், கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் இவர் தனது 68-வது அகவையில் காலமானார்.[4]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)