பனியா மொழி

பனியா
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்கேரளாவின் வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர், மலப்புறம் மாவட்டங்கள்; தமிழ்நாட்டில் நீலகிரி மலைகளுக்கு மேற்குப்புறம்; கர்நாடகம்.
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
63,827 (1981)  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-3pcg


பனியா மொழி தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழியாகும். இந்தியாவில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாழ 63,827 பேர்களால் பேசப்படுகிறது. இதில், 56,952 பேர் கேரளாவிலும், 6393 பேர் தமிழ்நாட்டிலும், 482 பேர் கர்நாடகத்திலும் உள்ளனர். இது பனியன், பன்யா போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுவது உண்டு. மலப்புறப் பனியாவை, குடகுப் பனியா புரிந்துகொள்ளும் தன்மை 66% ஆகும். மலப்புறப் பனியாவுடனான பிற கிளைமொழிகளின் சொல்லொற்றுமை 79% - 88% அளவுக்கு உள்ளது. ஆனால் குடகுப் பனியாவின் சொல்லொற்றுமை 71% அளவே ஆகும்.

இம்மொழி, வீட்டுமொழியாகவும், சமயத்தேவைகளுக்கும் பன்படுகிறது. அந்தந்த மாநிலங்களின் அரசாங்க மொழிகளைப் பேசக்கூடியவர்களாக உள்ளனர். இரண்டாம் மொழியில் அவர்கள் கல்வியறிவு 11% (1981) எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]