பனிரா கிரி Banira Giri | |
---|---|
वानीरागिरि | |
![]() கவிஞர் பனிரா கிரி | |
தாய்மொழியில் பெயர் | वानीरागिरि |
பிறப்பு | குர்சியோங்கு, டார்ச்சிலிங்கு, இந்தியா | 11 ஏப்ரல் 1946
இறப்பு | 24 மே 2021 உள்ளூர் மருத்துவமணை, காட்மாண்டு | (அகவை 75)
கல்வி | முனைவர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | திரிபுவன் பல்கலைக்கழகம், முனைவர். |
பணி | கவிஞர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் |
|
வாழ்க்கைத் துணை | சங்கர் கிரி |
பிள்ளைகள் | 2 |
விருதுகள் | சாச்கா புரசுகார் |
பனிரா கிரி (BaniraGiri) நேபாள நாட்டைச் சேர்ந்த ஒரு கவிஞர் ஆவார்.11 ஏப்ரல் 1946 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். கரகர், மேரோ அவிசுகர் என்ற கவிதைத் தொகுப்பு, சப்ததித் சாந்தனு போன்ற பல படைப்புகளை எழுதி வெளியிட்டுள்ளார்.[1][2][3][4]தனது கவிதைத் தொகுப்பான சப்ததித் சாந்தனுவுக்கு மதிப்புமிக்க சாச்கா புரசுகார் விருதைப் பெற்றார். இப்பரிசு பெற்ற முதல் பெண் எழுத்தாளர் என்ற சிறப்பு இவருக்கு உண்டு.
கோபால் பிரசாத் ரிமாலின் கவிதைகள் குறித்த ஆய்வறிக்கைக்காக திரிபுவன் பல்கலைக்கழகத்தால் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி என்ற சிறப்பும் பனிரா கிரிக்கு உள்ளது.[5]
மே 24, 2021 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் தேதியன்று இரவு பனிரா கிரி மாரடைப்பால் பாதிக்கப்பட்டு தனது 75 ஆவது வயதில் இறந்தார். கோவிட்-19 நோயறி சோதனையில் பனிராவுக்கு கொரோனா நோய் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது.[6]