பன்காலாகாஜி குகைகள் | |
---|---|
![]() பன்காலாகாஜி குகைகள் | |
ஆள்கூறுகள் | 17°38′44″N 73°14′42″E / 17.645678°N 73.245072°E |
பன்காலாகாஜி குகைகள் (Panhalakaji Caves) என்பது மகாராட்டிரா மாநிலத்தின் மும்பைக்கு 160 கி.மீ தெற்கே இரத்தினகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த குகை வளாகத்தில் சுமார் 30 பௌத்த குகைகள் உள்ளன . [1] பௌத்த சமயத்தின் பெரிய உட்பிரிவானஈனயானப் பிரிவு பொ.ச. 3 ஆம் நூற்றாண்டில் குகைகளை செதுக்கத் தொடங்கியது. தற்போதைய குகை 5இல் உள்ள தாது கோபுரத்துடன் [2] குகைகளில் பிராமி மற்றும் தேவநாகரி எழுத்துக்களில் கல்வெட்டுகள் உள்ளன. பொ.ச. 10-11ஆம் நூற்றாண்டில், மற்றொரு பௌத்தக் குழுவான வச்சிரயான பௌத்தம், தங்கள் தெய்வங்களான அக்சோப்யா மற்றும் மகாசந்தரோஷனா ஆகியோருடன் குகை 10ஐ நிறுவியது. மேலும், அந்த பிராந்தியத்தில் அவர்களின் நடைமுறையையும் வலுப்படுத்தியது. சிலகாரா மன்னர்களின் ஆட்சியின் போது சிவன் மற்றும் கணபதி வழிபாடு இந்த இடத்தில் தொடங்கியது. இங்கு மொத்தம் 29 குகைகள் உள்ளன. அவற்றில் 28 குகைகள் கோட்ஜாயின் வலது கரையில் அமைந்துள்ளது.
முக்கியமான குகைகளின் பட்டியல் பின்வருமாறு:
Deshpande, Madhusudan Narhar (1986). The caves of Panhāle-Kājī (ancient Pranālaka): an art historical study of transition from Hinayana, Tantric Vajrayana to Nath Sampradāya (third to fourteenth century A.D.) (in English). New Delhi: Archaeological Survey of India. ASIN B0006EPMPS. OCLC 923371295. Retrieved 5 February 2021.{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)