பன்னாட்டு ஆர்க்டிக் ஆராய்ச்சி மையம் (International Arctic Research Center) 1999 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.[1] இந்நிறுவனம் ஆர்க்டிக் பிரதேசத்தில் காலநிலை மாற்றம் பற்றிய ஆய்வை மேற்கொண்டு அதை ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்துகிறது. பன்னாட்டு ஆர்க்டிக் ஆராய்ச்சி மையத்தின் முதன்மை பங்காளிகள் சப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளாகும். கனடா, சீனா, டென்மார்க், செருமனி , சப்பான், நார்வே, உருசியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
பன்னாட்டு ஆர்க்டிக் ஆராய்ச்சி மையம் பேர்பேங்சு நகரத்திலுள்ள அலாசுகா பேர்பேங்சு பல்கலைக்கழகத்தில் சியுன்-இச்சி அகசோஃபு கட்டடத்தில் அமைந்துள்ளது. கீத் பி. மாத்தர் நூலகம் அகசோஃபு கட்டிடத்தில் அமைந்துள்ள ஓர் அறிவியல் நூலகமாகும். இது பன்னாட்டு ஆர்க்டிக் ஆராய்ச்சி மையம் மற்றும் அலாசுகா பேர்பேங்சு பல்கலைக்கழகத்தின் புவி இயற்பியல் நிறுவனங்களுக்கு சேவை செய்கிறது. இந்த கட்டடத்தில் அலாசுகா பேர்பேங்சு பல்கலைக்கழகத்தின் வளிமண்டல அறிவியல் துறை, உலகளாவிய மாற்றத்திற்கான மையம் மற்றும் தேசிய வானிலை சேவையின் பேர்பேங்சு முன்னறிவிப்பு அலுவலகம் ஆகியவையும் உள்ளன.
பன்னாட்டு ஆர்க்டிக் ஆராய்ச்சி மையத்தின் ஆய்வுத் திட்டங்கள் நான்கு முக்கிய கருப்பொருள்களுக்குள் கவனம் செலுத்துகின்றன:
பன்னாட்டு ஆர்க்டிக் ஆராய்ச்சி மையம் பின்வரும் மூன்று கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் குறிப்பிட்ட முயற்சியைச் செய்கிறது: