பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஐதராபாத்

பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (International Institute of Information Technology, Hyderabad), இந்தியாவின் தெலங்கானா மாநிலத் தலைநகரான ஐதராபாத்தில் இயங்கும் இத்தகவல் தொழில்நுட்ப நிறுவனம், தன்னாட்சி பெற்ற பல்கலைக்கழகமாக 1998 ஆண்டு முதல் இயங்குகிறது. இது இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.[1][2] தெற்காசியாவில் தகவல் தொழில் நுட்பக் கல்வி வழங்கும் முதல் ஏழு பல்கலைக்கழகங்களில், இப்பல்கலைக்ழகமும் ஒன்றாகும். மேலும் இப்பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்களில் நூறு விழுக்காட்டினருக்கும் வேலைவாய்ப்பு உறுதியாகும். இப்பல்கலைக் கழகம் தகவல் தொழில் நுட்பத்தில் இளநிலை மற்றும் முதுநிலை அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பட்டப் படிப்புகள் வழங்குகிறது. மேலும் இந்நிறுவனம் தகவல் தொழில் நுட்ப ஆய்வுப் படிப்பில் முதுதத்துவமாணி மற்றும் முனைவர் பட்டங்கள் வழங்குகிறது.

மேலும் இப்பல்கலைக்கழகம் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு இளநிலை மற்றும் முதுநிலை தகவல் தொழில்நுட்ப அறிவியியல் (B.S & M.S) மற்றும் தொழில்நுட்பப் பட்டங்கள் (B.Tech & M.Tech).

இத்தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில், மேனிலைப் பள்ளி முடித்த மாணவர்களை அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு முலம் அனுமதி வழங்கப்படுகிறது. இது போன்ற நிறுவனங்கள் பெங்களூரு[3] மற்றும் தில்லியில் [4] இயங்குகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. INTERNATIONAL INSTITUTES OF INFORMATION TECHNOLOGY
  2. INTERNATIONAL INSTITUTE OF INFORMATION TECHNOLOGY
  3. பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்ப நிறுவனம், பெங்களூரு
  4. இந்திரபிரஸ்தா தகவல் தொழில்நுட்ப நிறுவனம், தில்லி

வெளி இணைப்புகள்

[தொகு]