பன்னிரண்டு சகோதரிகள் (นางสิบสอง) அல்லது பன்னிரண்டு பெண்கள் என்பது ஒரு வகை புராணக்கதையாகும். இது தாய்லாந்து மொழியிலுள்ள தென் கிழக்காசிய நாட்டுப்புற கதையாகும். மேலும் இது பன்னாசா ஜாதகக் கதைகளின் (Paññāsa Jātaka) தொகுப்பில் ரதசேனா பற்றிய அபோக்ரிஃபா (Apocrypha) ஜாதகக் கதை ஆகும். இது புத்தரின் முந்தைய வாழ்க்கையை பற்றிய கதைகளில் ஒன்றாகும். பன்னிரண்டு பெண்களில் ஒருவரின் மகனாக ரதசேனாவாக (Rathasena) இருந்ததாகவும், அவர் போதிசத்துவாராக இருந்ததாகவும் கூறுகிறது.[1]
தென்கிழக்கு ஆசியாவில் சில நாடுகளான தாய்லாந்து, கம்போடியா மற்றும் லாவோஸ் ஆகியவற்றில் நாட்டுப்புற பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக பன்னிரண்டு சகோதரிகளின் கதை உள்ளது. மலேசிய சியாமிஸ்கள் மற்றும் மலேசிய சீனர்களிடையே புகழ் பெற்றிருந்த இந்த புராணமானது வெவ்வேறு நாடுகளிலிருந்தும் வெவ்வேறு தலைப்புகளில் பல்வேறு பதிப்புகளாக மலேசியாவில் பரவலாயிற்று.
தனது பெற்றோர்களால் கைவிடப்பட்டு ஒரு ஓக்ரஸ்ஸால் தத்தெடுக்கப்பட்ட பன்னிரண்டு சகோதரிகளின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு நீண்ட கதையாகும்.