பன்வாரி லால் சௌக்கிசே Banwari Lal Chouksey | |
---|---|
பிறப்பு | கங்கா பிப்பாலியா, போபால் மாவட்டம், மத்தியப் பிரதேசம், இந்தியா |
பணி | இயந்திர வல்லுநர் |
விருதுகள் | பத்மசிறீ மகாத்மா சியோதிபா புலே சம்மன் விசுவசர்மா ராசுட்ரிய புராசுக்கார் சிராம்புசான் சம்மன் |
பன்வாரி லால் சௌக்கிசே (Banwari Lal Chouksey) ஓர் இந்திய இயந்திர நிபுணர் மற்றும் கண்டுபிடிப்பாளர் ஆவார். புதுமையான பொறியியல் சிந்தனைகளுக்காக இவர் பெயர் பெற்றார். [1] இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபால் மாவட்டத்தில் உள்ள கங்கா பிப்பாலியாவில் பிறந்தார். உயர்நிலைப் பள்ளி மட்டத்தைத் தாண்டி இவர் முறையான கல்வியைப் பெறவில்லை. பாரத மிகு மின் நிறுவனத்தில் இயந்திர தொழிலாளியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், அங்கு ஒரு பொறியியலாளராக உயர்ந்தார். கனரக இயந்திரங்களுக்கான மாற்று உதிரி பாகங்களை இவர் வடிவமைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நிறுவனத்திற்கு பணத்தை மிச்சப்படுத்தியது மற்றும் பன்வாரி லால் தனது சில கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமையும் பெற்றுள்ளார். [2] மத்தியப் பிரதேச அரசின் மகாத்மா சோதிபா பூலே சம்மான், விசுவகர்மா ராசுட்ரிய புரசுகார் மற்றும் சிரம்பூசன் சம்மான் போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார். [2] அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக 2005 ஆம் ஆண்டில் இந்திய அரசு அவருக்கு நான்காவது உயரிய விருதான பத்மசிறீ விருதை வழங்கியது. [3]