கிடைக்கும் மொழி(கள்) | ஆங்கிலம் |
---|---|
உரிமையாளர் | கிளாரிவேட் அனலிட்டிக்ஸ் |
வணிக நோக்கம் | ஆம் |
பதிவு செய்தல் | தேவை |
பயனர்கள் | 200,000 |
வெளியீடு | 2012 |
தற்போதைய நிலை | நிகழ்நிலை |
உரலி | publons |
பப்லோன்சு (Publons)என்பது வணிக வலைத்தளமாகும். இது கல்வியாளர்களுக்கு அவர்களின் கல்வி ஆராய்ச்சி குறித்த ஆய்வுக்கட்டுரைகள்/வெளியீடுகளை கண்காணிக்கவும், சரிபார்க்கவும், காட்சிப்படுத்தவும் இலவச சேவையை வழங்குகிறது. 2012ல் தொடங்கப்பட்ட இந்த இணைய வசதியினை கிளாரிவேட் அனலிட்டிக்ஸ் 2017இல் தனதாக்கியது. அறிவியல் வலை (வெப் ஆப் சயன்ஸ், முடிவு குறிப்பு (எண்ட் நோட்) மற்றும் ஆய்வாளர் ஒன்று (ஸ்காலர் ஒன்) கிளாரிவேட் அனலிட்டிக்ஸின் சார்புகளாகும். 200,000க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் இந்த தளத்தில் சேர்ந்துள்ளதாகவும், 25,000 ஆய்வுப் பத்திரிகைகளில் வெளியாகியுள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஆய்வுக்கட்டுரைகளை மதிப்புரைகளைச் செய்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.[1][2][3]
பப்லோன்சு ஒரு நபரின் மதிப்பாய்வு மற்றும் பத்திரிகைகளுக்கான தலையங்க செயல்பாட்டின் சரிபார்க்கப்பட்ட பதிவை உருவாக்குகிறது, அவை சி.வி.க்கள், நிதி மற்றும் வேலை பயன்பாடுகள் மற்றும் பதவி உயர்வு மற்றும் செயல்திறன் மதிப்பீடுகளில் சேர்க்கப் பதிவிறக்கம் செய்யப்படலாம். பப்லோன்சு வணிக மாதிரி வெளியீட்டாளர்களுடன் கூட்டுச் சேருவதை அடிப்படையாகக் கொண்டது.[4]
அறிவியல் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும், ஆராய்ச்சி வெளியீட்டில் சக மதிப்பாய்வு நடைமுறைகளின் நிலையான நிலையை நிவர்த்தி செய்வதற்காகவும், ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கும், ஆண்ட்ரூ பிரஸ்டன் மற்றும் டேனியல் ஜான்ஸ்டன் ஆகியோரால் பப்லோன்சு நிறுவப்பட்டது. பப்லோன்சு என்பது "பப்லோன்" என்பதிலிருந்து, "வெளியிடக்கூடிய பொருளின் குறைந்தபட்ச அலகு" எனும் பொருண்மையில் மரியாதை செலுத்தும் விதமாக வைக்கப்பட்டது. நியூசிலாந்தில் பதிவு செய்யப்பட இந்நிறுவனத்திற்கு இங்கிலாந்தின் இலண்டனில் அலுவலகம் ஒன்று உள்ளது.
பப்லோன்சுகளை கிளாரிவேட் அனலிட்டிக்ஸ் 2017இல் வாங்கியது. கிளாரிவேட் மேற்கோளிட்டு வலைப்பின்னலில் மற்றும் ஆராய்ச்சியாளர் கருவிகளான, அறிவியல் வலை (வெப் ஆப் சயன்சு), எண்ட்நோட், இஸ்காலர் ஒன் ஆகியவற்றை உள்ளடக்கியது.[5] பப்லோன்சு, தற்போது வெப் ஆப் சயன்சுடன் இணைக்கப்பட்டுவிட்டது.
பப்லோன்சு கீழ்கண்ட சேவைகளை வழங்குகிறது:
மதிப்பாய்வு செய்யப்பட்ட வெளியீட்டின் வெளியீட்டைத் தொடர்ந்து திறனாய்வாளர்கள் தங்கள் மதிப்புரைகளின் உள்ளடக்கத்தைத் திறந்த அணுகலாமா வேண்டாமா என்பதைத் தேர்வு செய்யலாம், இருப்பினும் பத்திரிகைகள் இது குறித்த முடிவினைத் தாங்களும் தேர்வு செய்யலாம். படைப்பாக்க பொதுமங்கள் CC BY 4.0 உரிமத்தைப் பயன்படுத்தி மதிப்பாய்வு உள்ளடக்கம் பகிரப்படுகிறது. பப்லோன்சு முக்கிய வெளியீட்டு நிறுவனங்களுடன் ஒத்துழைப்பு வழங்கிவருகிறது. இந்நிறுவனங்களில் முக்கியமானவை ஸ்ப்ரிங்கர் நேட்சர், டெய்லர் மற்றும் பிரான்சிஸ், ஓக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பதிப்பகம், பிஎம்ஜே, சேஜ், விலே மற்றும் மேலும் பரணிடப்பட்டது 2018-11-08 at the வந்தவழி இயந்திரம், மேலும் தொடர்புடைய சேவைகளான அல்ட்மெட்ரிக் மற்றும் ஆர்சிட்.
பப்லோன்சு பயிற்சி நிறுவனம் ஆரம்பகால நிலை ஆராய்ச்சியாளர்களுக்கான பப்லோன்சு சக திறனாய்வு பயிற்சி வழங்கிவருகிறது.[6] இலவச, இணையவழி பாடநெறிக்கு மாணவர்கள் மேற்பார்வையாளரால் மதிப்பிடப்பட்ட மதிப்புரைகளைச் செய்து பயிற்சி பெறுகின்றனர். பாடநெறி முடிந்ததும், பட்டதாரி திறனாய்வாளர்கள் தளத்தில் உள்ள பப்லோன்சு கூட்டாளர் பத்திரிகைகளுக்குக் கண்டறியக்கூடியவர்களாக மாற்றப்படுகிறார்கள். பப்லோன்சு ஆய்வுக்கட்டுரை வெளியீட்டிற்கு முன் சகமதிப்பாய்வினை செய்ய ஆய்வாளர்களை அழைக்கிறது.
பப்லோன்சு சக மதிப்பாய்வு விருதுகள்[7] சிறந்த சக திறனாய்வாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அங்கீகாரமாகும். பப்லோன்சு விருதுகள் 2016இல் தொடங்கியது.[8] 2017ஆம் ஆண்டில் சென்டினல் விருது என்று அழைக்கப்படும் ஒரு விருது திட்டம் சேர்க்கப்பட்டது. சிறந்த ஆலோசகராகவும், புதுமை சார்ந்த அறிவார்ந்த சக மதிப்பாய்வு பங்களிப்புக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.[9]
வெளிப்படைத்தன்மை இல்லாதது வெளியீட்டுச் செயல்பாட்டில் பல சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது என டெக்கிரஞ்சு பப்லோன்சு குறித்து கருத்து தெரிப்பதோடு அதனைச் சரிசெய்ய விருப்பம் தெரிவிக்கின்றது. வெளியீட்டுக்கு முந்தைய மற்றும் பிந்தைய மதிப்பாய்வினை இத்தளம் ஆதரிக்கும் வேளையில், தற்போதுள்ள வெளியீட்டு விதிமுறைகளுக்கு ஏற்ப அனைத்து மதிப்புரைகளும் வெளியிடப்படவில்லை என்று ஆராய்ச்சி தகவல்கள் குறிப்பிட்டன.[10] சகமதிப்பாய்வு முக்கியமான பணி என நேச்சர் இதழ் குறிப்பிடுகிறது. மேலும் பப்லோன்சின் மிகச் சிறந்த விமர்சகர்கள் இருவரின் எதிர்வினைகள் குறித்தும் அறிக்கை அளித்தது.[11]
பப்லோன்சு தன்னுடைய சேவையை விளம்பரப்படுத்தக் கல்வியாளர்களுக்குக் கோரப்படாத மொத்த மின்னஞ்சலை அனுப்புகிறது. இச்செயல் ஏற்றுக்கொள்ளக்கூடிய பயன்பாட்டுக் கொள்கைகளை மீறியதாக மின்னஞ்சல் சேவை வழங்குநர்களால் தெரிவிக்கப்படுகிறது.[12]