பம்பாய் இலை-விரல் பல்லி | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | செதிலுடைய ஊர்வன
|
குடும்பம்: | ஜிகோனிடே
|
பேரினம்: | கெமிடாக்டைலசு
|
இனம்: | H. prashadi
|
இருசொற் பெயரீடு | |
Hemidactylus prashadi சுமித், 1935 |
கெமிடாக்டைலசு பிரசாதி (Hemidactylus prashadi), பொதுவாக பம்பாய் இலை-விரல் பல்லி அல்லது பிரசாத் பல்லி என்றும் அழைக்கப்படுகிறது. இது கெக்கோனிடே குடும்பத்தில் உள்ள பல்லி சிற்றினமாகும். இந்த சிற்றினம் இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்.
பிரசாதி என்ற சிற்றினப் பெயர், இந்திய விலங்கியல் நிபுணர் பைனி பிரசாத்தின் (1894-1969) நினைவாக இடப்பட்டது.[1]
கெ. பிரசாதி இந்தியாவில் மும்பை பகுதியில் (முன்னாள் பம்பாய் மாகாணம்) காணப்படுகிறது.
வகை வட்டாரம்: "ஜோக் அக்கம், என். கனரா மாவட்டம், பாம்பே மாகாணம்".[2]
கெ. பிரசாதியின் இயற்கை வாழ்விடம் 15–1,500 m (49–4,921 அடி) உயரத்தில் உள்ள காடுகள் ஆகும்.[3]
கெ. பிரசாதி உடல் நீளம் 9.5 cm (3.7 அங்) வரையிலும், வால் நீளம் 12 cm (4.7 அங்) வரையிலும் இருக்கும்.[2]
கெ. பிரசாதி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்பவை.