பம்பாய் உயர் நீதிமன்றம் | |
---|---|
![]() பம்பாய் உயர் நீதிமன்ற வளாகம் | |
நிறுவப்பட்டது | 1862 |
அமைவிடம் | மும்பை, நாக்பூர், அவுரங்காபாத், மகாராட்டிரம் மற்றும் பனாஜி |
புவியியல் ஆள்கூற்று | region:IN 18°55′52.26″N 72°49′49.66″E / 18.9311833°N 72.8304611°E |
நியமன முறை | தலைமை நீதிபதி மற்றும் மாநில ஆளுநர்கள் மற்றும் துணை ஆளுநர்களின் பரிந்துரையின் படி இந்தியக் குடியரசுத் தலைவர். |
அதிகாரமளிப்பு | இந்திய அரசியலமைப்பு |
தீர்ப்புகளுக்கானமேல் முறையீடு | இந்திய உச்ச நீதிமன்றம் |
நீதியரசர் பதவிக்காலம் | 62 அகவை வரை |
இருக்கைகள் எண்ணிக்கை | 75 |
வலைத்தளம் | http://bombayhighcourt.nic.in/ |
தலைமை நீதிபதி | |
தற்போதைய | மோகித் எஸ். ஷா |
பம்பாய் உயர் நீதிமன்றம் ஆகஸ்டு 14, 1862 அன்று ஆரம்பிக்கப்பட்டது. 1995 ஆம்ஆண்டு பம்பாய் என்ற தலைநகரப் பெயர் மும்பை என்று அதிகாரப்பூர்மாக மாற்றப்பட்டும் பம்பாய் உயர் நீதிமன்மன்றம் மட்டும் தன் பழையப் பெயருடன் நீடித்திருக்கும் வாய்ப்பைப் பெற்று இன்றும் பம்பாய் உயர் நீதிமன்றம் என்றே அழைக்கப்படுகின்றது.[1][2][3]
இந்நீதிமன்றத்தின் பணியாற்றும் நீதிபதிகளின் எண்ணிக்கை 60. இங்கு வழக்குகளின் எண்ணிக்கை அதிகமிருப்பதால் நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்தக் கோரி சமர்ப்பித்த மனுவும் அரசின் ஆய்வில் உள்ளது.
இதன் நீதிபரிபாலணத்தில் உள்ளடங்கிய மாநிலங்கள் மகாராட்டிரம், கோவா மற்றும் யூனியன் பிரதேசங்களான தமன் தியூ, தாத்ரா மற்றும் நாகர் அவேலி. இதன் அமர்வுகள் முறையே நாக்பூர், அவுரங்காபாத் மற்றும் பனாஜி ஆகிய இடங்களில் நடைபெறுகின்றன.