பரதேசி யூதத் தொழுகைக் கூடம் | |
---|---|
![]() Interior of the synagogue facing the ark | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | கொச்சி, கேரளம் |
புவியியல் ஆள்கூறுகள் | 9°57′26″N 76°15′34″E / 9.95722°N 76.25944°E |
சமயம் | மரபுவழி யூதம் |
செயற்பாட்டு நிலை | செயற்படுகிறது |
பரதேசி யூதத் தொழுகைக் கூடம் (Paradesi Synagogue) என்பது கொச்சியில் அமைந்துள்ள, நாடுகளின் பொதுநலவாயத்தில் உள்ள[1] செயற்பாட்டிலுள்ள மிகவும் பழமையான[2] யூத தொழுகைக் கூடம் ஆகும். 1567 இல் கட்டப்பட்ட இது கொச்சி இராச்சியத்தில் "கொச்சி யூத" சமுகத்தினால் கட்டப்பட்ட ஏழு தொழுகைக் கூடங்களில் ஒன்றாகும்.
இந்திய மொழிகளின் பயன்பாட்டில் பரதேசி என்பது வெளிநாட்டவரைக் குறிக்கும் என்பதால் அத்தொழுகைக் கூடத்திற்கும் அப்பெயர் அமைந்தது. அது கொச்சி யூதத் தொழுகைக் கூடம் எனவும் அழைக்கப்படும்.