![]() | ||||||||||||||||||||||
தனித் தகவல் | ||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 1982 (அகவை 42–43) கலிம்போங், மேற்கு வங்கம், இந்தியா | |||||||||||||||||||||
விளையாடுமிடம் | கோல்காப்பாளர் | |||||||||||||||||||||
மூத்தவர் காலம் | ||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | தோற்றம் | (கோல்கள்) | |||||||||||||||||||
Services | ||||||||||||||||||||||
2013-அண்மை வரை | பஞ்சாப் வீரர்கள் | 14 (0) | ||||||||||||||||||||
தேசிய அணி | ||||||||||||||||||||||
2001-அண்மை வரை | இந்திய தேசிய வளைதடிப் பந்தாட்ட அணி | |||||||||||||||||||||
பதக்க சாதனை
|
பரத் சேத்ரி (Bharat Chettri) (பிறப்பு: 1982 கலிம்போங், மேற்கு வங்கம்)[1] (நேபாளி: भरत छेत्री) ஓர் இந்திய வளைதடிப் பந்தாட்ட வீரர் ஆவார். இவர் கலிம்போங்கின் நேபாளி குமுகத்தைச் சேர்ந்தவர். இவர் இந்திய ஆடவர் வளைதடிப் பந்தாட்டக் குழுவின் கோல்காப்பாளர் ஆவார்.
பெங்களூரில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் சிறப்புத் தகுதி மையத்தில் 1998 இல் சேர்ந்ததுமே இவரது தொழில்முறை வாழ்க்கை தொடங்கியது.[1] இவர் 2001 இல் வங்கதேசம் டாக்காவில் நடந்த பன்னாட்டு வளைதடிபந்தாட்ட இந்திய முதன்மை அமைச்சர் தங்கக் கோப்பைப் போட்டியில் வென்று சாதனை படைத்தார்]. இவர் 2011 அக்தோபரில் ஆத்திரேலியாவில் நடந்த நான்குநாடுகளின் மீத்தொடர்ப் பன்னாட்டுப் போட்டியில் இந்தியத் தேசியக் குழுவின் தலைவராக அமர்த்தப்பட்டார்.[2] இவர் மலேசியாவில் நடந்த 2012 சுல்தான் அசுலான் சா கோப்பைக்கான 18 உறுப்பினர்க் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். இது வெண்கலப் பதக்கத்தை வென்றது.[3] இலண்டனில் நடைபெற்ற 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட 16 பேர் கொண்ட இந்திய வளைதடிப் பந்தாட்டக் குழுவிற்கு தலைமையேற்றிருந்தார்.[4]
ஒலிம்பிக்கில் மோசமாக ஆடியதால் இவரும் சந்தீப் சிங்கும் சிவேந்திர சிங்கும் குழுவில் இருந்து தள்ளப்பட்டனர்.[5]
இந்திய வளைதடிபந்தாட்டக் குழுவின் ஏலத்தில் சேத்ரியை பஞ்சாப் வீரர்கள் அணி 19,000 அமெரிக்க டாலருக்கு எடுத்தது.[6] இவரது அடிப்படைக் கோரல் 18,500 அமெரிக்க டாலர் ஆகும். முதல் சுற்று ஏலத்தில் யாரும் இவரைக் கோராவிட்டாலும்[7] இரண்டாம் சுற்று ஏலத்தில் இவர் எடுக்கப்பட்டார்.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)