பரப்பூர் | |
---|---|
கணக்கெடுப்பு ஊர் | |
ஆள்கூறுகள்: 11°02′01″N 76°00′00″E / 11.0335300°N 76.000100°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | மலப்புறம் |
உருவாக்கம் | 1956 |
அரசு | |
• வகை | ஊராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 15.11 km2 (5.83 sq mi) |
ஏற்றம் | 45 m (148 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 36,270 |
• அடர்த்தி | 2,400/km2 (6,000/sq mi) |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 676503 |
தொலைபேசி குறியீடு | 0483 |
வாகனப் பதிவு | KL-65 |
அருகில் உள்ள நகரம் | கோட்டக்கல் |
பாலியல் விகிதம் | 1062 ♂/♀ |
எழுத்தறிவு | 91.45% |
மக்களவைத் தொகுதி | மலப்புறம் |
சட்டமன்றத் தொகுதி | வெங்கரா |
இணையதளம் | lsgkerala |
பரப்பூர் (Parappur) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தின், மலப்புரம் மாவட்டத்தில் கோட்டக்கல்லுக்கு வடக்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். [1]
இந்தக் கிராமத்தின் நிலப்பரப்பை ஆற்றுச் சமவெளிகள், சரிவுகள், பள்ளத்தாக்குகள், சமவெளிகள், ஆறுகள், ஓடைகள் என பிரிக்கலாம். கேரள மாநிலம் உருவான 1956 ஆம் ஆண்டு பரப்பூர் ஊராட்சி நிறுவப்பட்டது. கடலுண்டிப்புழா, சயாத்திரியில் உருவாகி மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பல ஊராட்சிகள் வழியாக பாய்கிறது, பின்னர் பரப்பூர் ஊராட்சியின் நடுவில் பாய்ந்து ஊராட்சியை இரண்டாக பிரிக்கிறது. ஊராட்சியின் முதல் தலைவர் டி. இ. முகம்மது ஹாஜி ஆவார். அப்போது தேர்தல் நடத்தப்படவில்லை. என்றாலும் அறக்கட்டளையில் நடத்தபட்ட வாக்கெடுப்பு மூலம் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். [2]
கோழிக்கோடு சாமுத்திரிகளின் ஆட்சிக்காலத்தில் இருந்த கோட்டக்கல் கிழக்கு கோயிலகத்தினர் பகுதியிலுள்ள பெரும்பாலான நிலங்களின் உரிமையாளராக இருந்தனர். இரிங்கல்லூரில் நிலம் வைத்திருந்த நிலப்பிரபுக்கள், கோழிக்கோட்டில் வேரூன்றிய கொல்புரம் கீழத்துக்குன்னம் பணிக்கர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர். 1970 களில் நடைமுறைப்படுத்தப்பட்ட புகழ்பெற்ற நிலச் சீர்திருத்தச் சட்டம், கேரளத்தின் பிற பகுதிகளிலும் நிலப்பிரபுத்துவத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. இளிலிப்பிலக்கல், வெட்டம், பழனி, குழிபுரம் மேற்குப் பள்ளி, குழிபுரம் கிழக்குப் பள்ளிவாசல், வீணாலுக்கல் ஜும்ஆ மஸ்ஜித், வடக்கும் முறி பள்ளிவாசல் போன்ற பழைய ஜும்ஆ மசூதிகள் உள்ளன. அவை சுமார் 200 முதல் 400 ஆண்டுகள் பழமையானவை. வீணாலுக்கலில் உள்ள குரும்பா கோயில், சுப்பிரமணியர் கோயில், இரிங்கல்லூர் ஐயப்பன் காவு கோயில், கடியகாவு பகவதி கோயில், ஆசிரமமங்கலம் சிவன் கோயில் ஆகியவை இப்பகுதியில் உள்ள பழமையான கோயில்களில் சிலவாகும்.
இந்த சிற்றூர் 15.11 சதுர கிமீ (4,473 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது. இதன் வடக்கே வெங்கரா, ஊரகம் மற்றும் ஒத்துக்குங்கல் கிராமங்களும், கிழக்கில் ஒத்துக்குங்கல் கிராமம், தெற்கே எடரிக்கோடு மற்றும் கொட்டக்கல் கிராமங்கள், மேற்கே எடரிக்கோடு மற்றும் வெங்கரா ஆகியவை எல்லைகளாக உள்ளன. இது வெங்கரா சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது. கடலுண்டி ஆறு பரப்பூர் கிராமத்தில் பல பகுதிகளில் பாய்கிறது. கடும் மழைக்காலங்களில் சில சமயங்களில் ஆறு உடைப்பெடுத்து கிராம குடியிருப்புகள் மற்றும் நெல் வயல்களில் புகுந்து உள்ளூர் வாழ்க்கைக்கு இடையூறு விளைவிக்கிறது.
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பரப்பூரின் மொத்த மக்கள் தொகை 19221 ஆகும். இதில் ஆண்களின் எண்ணிக்கை 36270 என்றும், பெண்களின் எண்ணிக்கை 19295 என்றும் உள்ளது.[1]
2008 சர்வதேச நிதி நெருக்கடிக்குப் பிறகு சிறிய எண்ணிக்கையில் வளைகுடா பிராந்தியம் பாதிக்கத் தொடங்கினாலும், கிராமத்திலிருந்து வளைகுடா பகுதிகளுக்கு புலம்பெயர் தொழிலாளர்களின் நகர்வு இன்றுவரை தொடர்கிறது. [3]
பரப்பூர் கிராமம் கோட்டக்கல் நகரத்தின் வழியாக இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைகபட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண்.66 தானூர் வழியாக செல்கிறது மற்றும் வடக்கு பகுதி கோவா மற்றும் மும்பையுடன் இணைகிறது. தெற்கு பகுதி கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தை இணைக்கிறது. மாநில நெடுஞ்சாலை எண்.28 நிலம்பூரில் இருந்து தொடங்கி உதகமண்டலம், மைசூர் மற்றும் பெங்களூர் நெடுஞ்சாலைகள்.12,29 மற்றும் 181 வழியாக இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை எண்.966 பாலக்காடு மற்றும் கோயம்புத்தூரை இணைக்கிறது. அருகிலுள்ள வானூர்தி நிலையம் கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். அருகிலுள்ள பெரிய தொடருந்து நிலையம் திரூரில் உள்ளது.
பரப்பூர் கிராமத்தில் ஐயு மேல்நிலைப் பள்ளி, [4] ஐயு கலைக் கல்லூரி மற்றும் பல மேல் மற்றும் உயர் நிலைப் பள்ளிகள், துவக்கப்பள்ளிகள் போன்ற பிரபலமான கல்வி நிறுவனங்கள் உள்ளன.