பராக் பள்ளத்தாக்கு (Barak Valley), வடகிழக்கு இந்தியாவின் அசாம் மாநிலத்தின் தெற்கில் மலைகளால் சூழப்பெற்றுள்ளது. இப்பகுதியில் பராக் ஆறு பாய்வதால் இதற்கு பராக் பள்ளத்தாக்கு எனப்பெயராயிற்று. மலைகள் மற்றும் பராக் பள்ளத்தாக்கு கோட்டத்தில் அமைந்த பராக் பள்ளத்தாக்கில் அசாமின் கசார் மாவட்டம், கரீம்கஞ்சு மாவட்டம், ஹைலாகண்டி மாவட்டம் உள்ளது. பராக் பள்ளத்தாக்கின் பெரிய நகரம் சில்சார் ஆகும். [1]
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி பராக் பள்ளத்தாக்கின் மக்கள் தொகை 36,24,599 ஆகும்.
பராக் பள்ளத்தாக்கில் பேசப்படும் மொழிகள் (2011)[2]
பராக் பள்ளத்தாக்கின் சமயங்கள்(2011)[3]
சமயம் | மக்கள் தொகை |
---|---|
இந்துக்கள் (![]() |
1,812,141 |
முஸ்லீம் (![]() |
1,744,958 |
கிறித்தவர் (![]() |
58,105 |
பிறர் | 9,395 |
மொத்தம் | 3,624,599 |
மாவட்டம்/(தலைமையிடம்) | மொத்த மக்கள் தொகை | இந்துக்கள் (%) | முஸ்லீம்கள் (%) | பிறர் |
---|---|---|---|---|
கசார் மாவட்டம்/(சில்சார்) | 172,830 | 154,381 (86.31%) | 21,759 (12.17%) | 3,310 |
ஹைலாகண்டி மாவட்டம்/(ஹைலாகண்டி) | 33,637 | 22,624 (67.26%) | 10,686 (31.77%) | 327 |
கரீம்கஞ்சு மாவட்டம்/(கரீம்கஞ்சு) | 56,854 | 49,218 (86.57%) | 6,856 (12.06%) | 780 |
பராக் பள்ளத்தாக்கில் தேயிலைத் தோட்டங்கள் அதிகம் உள்ளது.
பராக் பள்ளத்தாக்கின் காடுகளில் 104 வீடுகள் உள்ளது.[5]இப்பள்ளத்தாக்கின் மூன்று மாவட்டங்களில் கசார் மாவட்டத்தில் 2,222 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட காடுகளும்; ஹைலாகண்டி மாவட்டத்தில் 774.34 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட காடுகளும்;கரீம்கஞ்சு மாவட்டத்தில் 851.43 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட காடுகளும் உள்ளது.[6]
பராக் பள்ளத்தாக்கின் சராசரி வெப்பம் 35° முதல் 40 °C வரை இருக்கும். ஆண்டின் சராசரி மழைப்பொழிவு 100 முதல் 200 செண்டி மீட்டர் வரை உள்ளது.[7]