பருல் சவுத்ரி

பருல் சவுத்ரி
Parul Chaudhary
ஒடிசாவில் நடைபெற்ற 22ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் பருல் சவுத்ரி. 2017 ஆசிய தடகள வெற்றியாளர் போட்டி புவனேசுவரில் உள்ள கலிங்கா விளையாட்டரங்கில் 2017 சூலை 6 முதல் 9 வரை நடந்தது.
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியர்
பிறப்பு15 ஏப்ரல் 1995 (1995-04-15) (அகவை 29)
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)நீண்ட தூர ஓட்டம்
சாதனைகளும் விருதுகளும்
தனிப்பட்ட சாதனை(கள்)5000 மீ: 15:10.35 (2023)
3000 மீ தடை ஒட்டம்: 9:19.51 (2023)


பருல் சவுத்ரி (Parul Chaudhary) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தடகள வீராங்கனையாவார். 1995ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் தேதியன்று இவர் பிறந்தார். தடைகளோடு கூடிய 3000 மீட்டர், 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இவர் நிபுணத்துவம் பெற்றுள்ளார்.[1] பெண்களுக்கான 3000 மீ ஓட்டத்தில் 9 நிமிடங்களுக்குள் ஓடிய முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பு இவருக்கு உண்டு.[2]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகரத்தில் ஓர் இந்து குடும்பத்தில் பருல் சவுத்ரி பிறந்தார்.[3]

சிறப்பு

[தொகு]

2023 ஆம் ஆண்டு சூலை மாதம் பேங்காக்கில் நடைபெற்ற ஆசிய தடகள வெற்றியாளர் போட்டியில் பெண்களுக்கான 3000மீ தடைகளோடு கூடிய 3000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பருல் சவுத்ரி தங்கப் பதக்கம் வென்றார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Parul Chaudhary". IAAF. பார்க்கப்பட்ட நாள் 17 July 2022.
  2. "Athletics: Parul Chaudhary sets 3000m national record, first Indian woman to clock sub-9 minute time". Scroll.in. 2022-07-04. பார்க்கப்பட்ட நாள் 2022-07-25.
  3. National Inter-state Senior Athletics Championship: Parul Chaudhary secures gold in 3000m steeplechase, qualifies for Asian Games, ANI News, 18 June 2023.
  4. "Asian Athletics Championships: Parul Chaudhary wins gold in women's 3000m steeplechase".