பரூல் பார்மர் Parul Dalsukhbhai Parmar | ||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
29 ஆகஸ்டு 2009 ஆம் ஆண்டு, குடியரசு தலைவர் பிரதிபா பாட்டிலிடமிருந்து பரூல் பார்மர், அர்சுனா விருதை வாங்கும் காட்சி | ||||||||||||||||||||||||||||||||||||||
நேர்முக விவரம் | ||||||||||||||||||||||||||||||||||||||
நாடு | இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 20 மார்ச்சு 1973[1] | |||||||||||||||||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
பரூல் தல்சுக்பாய் பார்மர்(Parul Dalsukhbhai Parmar) (பிறப்பு: 20 மார்ச், 1973) இந்திய பாரா பேட்மிண்டன் வீராங்கனை ஆவார். இவர் பாரா பேட்மிண்டனில், உலக சாம்பியன் பட்டம் பெற்றதோடு,[2] உலகத் தரவரிசையில் முதல் இடத்திலும் இடம் பெற்றுள்ளார். இவர் விளையாட்டுத்துறையில் இந்தியாவின் மிக உயரிய விருதான அர்ஜுனா விருதைப் பெற்றுள்ளார்.
பார்மர் 1973 மார்ச்சு 20 அன்று குஜராத்தின் காந்திநகரில் பிறந்தார். இவருக்கு மூன்று வயதாக இருந்தபோது போலியோ இருப்பது கண்டறியப்பட்டது. அதோடு மூன்று வயதில் பார்மர் விளையாடும் போது ஊஞ்சலில் இருந்து கீழே விழ, இவரது கழுத்தெலும்பும் வலது கால் எலும்பும் முறிந்தது. காயம் குணமடைய நீண்ட நாட்கள் சிகிச்சையும் ஓய்வும் தேவைப்பட்டது. இவரது கால்களை வலுப்படுத்தவும், நன்றாக குணமடையவும் உடற்பயிற்சி செய்யுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். மாநில அளவிலான பேட்மிண்டன் வீரரான இவரது தந்தை, உள்ளூர் பேட்மிண்டன் கிளப்புக்கு பயிற்சி பெற செல்வார். பார்மரும் தனது தந்தையுடன் கிளப்புக்குச் செல்லத் தொடங்க, விளையாட்டில் ஆர்வம் காட்ட தொடங்கினார். அருகில் வசிக்கும் குழந்தைகளுடன் இவர் பேட்மிண்டன் விளையாட தொடங்கினார். உள்ளூர் பயிற்சியாளரான சுரேந்திர பரேக், பார்மரின் சிறப்பு திறமையைக் கவனித்து, இவர் மேலும் தீவிரமாக விளையாட ஊக்குவித்தார். பார்மர் பேட்மிண்டன் விளையாடத் தொடங்கினாலும், பாரா பேட்மிண்டன் என்ற ஒரு விளையாட்டு இருப்பதை இவர் நீண்ட காலமாக அறிந்திருக்கவில்லை. பாரா பேட்மிண்டன் விளையாட்டில் இவர் போட்டியிடத் தொடங்கியதும், தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் இவர் வெற்றி பெற்றார்.