பரேஷ் சந்திரா பட்டாச்சாாியா: (பிறப்பு மார்ச் 1-1903)[1] இவா் இந்திய ரிசர்வ் வங்கியின் ஏழாவது கவா்னராக 1 மார்ச் 1962 முதல் 30 ஜூன் 1967 வரை பதவி வகித்தாா்.[2] அவரது முன்னோடிகளை போல் அல்லாமல் இந்திய தணிக்கை மற்றும் கணக்கு சேவை (IA&AS) உறுப்பினராகவும் இவா் இருந்துள்ளாா். அவர் 1946 புத்தாண்டை கௌரவ படுத்தும் விதமாக பிரித்தானிய எம்பயர் (OBE) ஆணையாளராக நியமிக்கப்பட்டார்.[3] அவர் நிதி அமைச்சகத்தின் செயலாளராக பணியாற்றினார். பின்னர் கவா்னராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் இந்திய ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் தலைவராகவும் இருந்துள்ளாா்.
இந்தியாவில் தனியாா் வங்கிகளை தேசியமயமாக்கப்படுவதை கடுமையாக எதிா்த்தாா்.[4] அவ்வாறு வங்கிகள் தேசியமயமாக்க ஆகும் செலவுகள் பற்றி உள்துறை துணை பிரதம மந்திரி மொரார்ஜி தேசாய் எச்சரிக்கைக்கு கடிதம் எழுதினார். தனது பதவிக்காலத்தின் போது, பொருளாதார காரணங்களுக்காக நாணயங்களின் அளவை குறிப்பாக 5, 10 மற்றும் 100 நோட்டுகளின் அளவு குறைக்கப்பட்டது.[5]
பட்டாச்சாாியாவின் பதவி காலத்தில், 1964 ஆம் ஆண்டு இந்தியாவின் தொழிற்துறை மேம்பாட்டு வங்கி, 1963 இல் இந்தியாவின் வேளாண் மறுநிதிக் கூட்டுத்தாபனம்தேசியமயமாக்கல்மற்றும் 1964 ல் யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா ஆகியவைகள் நிறுவப்பட்டது.