பரோன் பட்டாக்கத்தி பாம்பு | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | கொலுபுரிடே
|
பேரினம்: | ஒலிகோடான்
|
இனம்: | ஒ. பரோனி
|
இருசொற் பெயரீடு | |
ஒலிகோடான் பரோனி (எம். ஏ. சுமித், 1916) | |
வேறு பெயர்கள் [2] | |
|
ஒலிகோடான் பரோனி (Oligodon barroni) அல்லது பரோன் பட்டாக்கத்தி பாம்பு என்பது கொலுப்ரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாம்பு சிற்றினம் ஆகும். இந்த சிற்றினம் தென்கிழகாசியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[1][2]
இதன் சிற்றினப் பெயர், பரோனி, பி. ஏ. ஆர். பரோன் நினைவாக, பரோன் இச்சிற்றின நிறைவகை உட்பட முதல் மூன்று மாதிரிகளைச் சேகரித்ததற்காக இடப்பட்டது.[3]
ஓ. பரோனி கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து மற்றும் வியட்நாமில் காணப்படுகிறது.[1]
ஓ. பரோனியின் இயற்கையான வாழிடம் காடுகளாகும். இது 300 முதல் 1,000 மீ உயரப் பகுதிகளில் காணப்படுகிறது.[1]
ஓ. பரோனி 40 செ. மீ. மொத்த நீளத்தை அடையலாம். முதுகெலும்பு செதில்கள் 17 வரிசைகளில் உடலின் மையப்பகுதிகளில் அமைந்துள்ளன.[2]
ஓ. பரோனி முக்கியமாகச் சிறிய அரணை மற்றும் பிற ஊர்வனவற்றின் முட்டைகளை உணவாகக் கொள்கிறது.[1]
ஓ. பரோனி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றது.[2]