பர்தியா தனேசுவர் | |
---|---|
நாடு | ஈரான் |
பிறப்பு | சூன் 21, 2006[1] தலேசு, ஈரான் |
பட்டம் | கிராண்டுமாசுட்டர் (2023) |
உச்சத் தரவுகோள் | 2577 (சூலை 2023) |
பர்தியா தனேசுவர் (Bardiya Daneshvar, Persian: بردیا دانشور) ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க விளையாட்டு வீரராவார். 2006 ஆம் ஆண்டு சூன் மாதம் 21 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 2023 ஆம் ஆண்டு பர்தியா தனேசுவருக்கு கிராண்டுமாசுட்டர் பட்டம் வழங்கப்பட்டது.
2022 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் தனேசுவர் ஈரானிய ஆடவர் இறுதி சதுரங்கப் போட்டியை வென்றார். இப்போட்டியில் அந்நாட்டின் முதல் நிலை வீரரான செயத் கலீல் மௌசாவிக்கு தேசுவருக்குப் பின்தங்கினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.[2]
அக்டோபர் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தனேசுவர் உலக இளைஞர் 16 வயதுக்குட்பட்டோர் ஒலிம்பியாடு போட்டியில் ஈரானைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இந்தியாவின் வி. பிரணவ் உடனான போட்டி சமநிலையில் முடிந்ததால் ஈரானும் இந்தியாவும் போட்டியை சமநிலையில் முடித்தன.[3]
2023 ஆண்டு சூன் மாதத்தில் தனேசுவர் ஆசிய கண்டங்களுக்கிடையிலான சதுரங்க வெற்றியாளர் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார், வெற்றியாளர் சம்சிதின் வோகிதோ முதலிடம் பிடித்தார்.[4]
தனேசுவர் 2023 சதுரங்க உலகக் கோப்பையில் விளையாடினார், அங்கு இவர் முதல் சுற்றில் மகமது முரட்லியை தோற்கடித்தார். பின்னர் கிராண்ட்மாசுட்டர் மற்றும் போட்டியின் 12 ஆவது நிலை வீரரான அலெக்சாண்டர் கிரிசுசுக்கை இரண்டாவது சுற்றில் தோற்கடித்தார்.[5] தனேசுவர் பின்னர் மூன்றாவது சுற்றில் சேலம் சலேவிடம் தோற்ருப் போனார்.