பர்தீப் மோர்

பர்தீப் மோர் (Pardeep Mor) ஓர் இந்திய தொழில்முறை வளைகோல் பந்தாட்ட வீரராவார்[1]. 1992 ஆம் ஆண்டு சூன் மாதம் 3 ஆம் தேதி இவர் பிறந்தார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர் பொதுவாக வளை கோல் பந்தாட்டத்தின் போது தடுப்பு ஆட்டக்காரராக களமிறங்கி விளையாடுவதில் நிபுணத்துவம் பெற்றவராவார்.

சாதனைகள்

[தொகு]

இரியோ டி செனீரோவில் நடைபெற்ற 2016 கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் ஆடவர் வளைகோல் பந்தாட்ட அணியில் இடம் பிடித்தார்[2]. 2015 ஆம் ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடுவதற்காக கலிங்கா இலேன்சர் நிறுவனம் இவரை $37,000 கொடுத்து ஏலத்தில் எடுத்தது[3]. 16 அனைத்துலகப் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் கோல்கள் எதுவும் அடிக்கவில்லை. அரியானாவிலுள்ள சோனிபத்தில் அமைந்திருக்கும் இந்திய விளையாட்டு ஆணையத்தில் பர்தீப் மோர் ஒரு உறுப்பினர் ஆவார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-08-20. Retrieved 2016-08-28.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-12-21. Retrieved 2016-08-28.
  3. http://www.india.com/sports/live-hockey-india-league-players-auction-live-updates-of-hil-2015-auction-555726/