பின்னணியில் நட்சத்திரங்களுக்கு முன்னால் பர்னார்டு 92 பர்னார்டு 92 (Barnard 92) என்பது சிறிய வில் விண்மீன்குழாம் விண்மீன் மேகத்தில் அமைந்துள்ள ஓர் இருள் விண்மீன் படலமாகும். அமெரிக்க வானியலாளர் எட்வர்ட் எமர்சன் பர்னார்டு இதை கண்டுபிடித்தார். சுருக்கமாக இதை பி 92 என்றும் அழைப்பர்.
பர்னார்டு 92 ஆரம்பத்தில் கருந்துளை என்று குறிப்பிடப்பட்டது.[1] ஒரு கருந்துளை போன்ற தோற்றத்தை கொடுத்ததால் 1913 ஆண்டு முதன்முதலில் பட்டியலிடப்பட்ட போது இவ்வாறு கருதப்பட்டது.[2] இது ஓர் இருள் விண்மீன் படலம் என்று பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தலைப்பு இப்போது தவறாக வழிநடத்துகிறது, ஏனெனில் நவீன வானியற்பியலில் கருந்துளை என்ற பெயர் விண்வெளி நேரத்தின் ஒரு பகுதியை விவரிக்க பயன்படுத்தப்படுகிறது. இதில் ஒளி தப்பிக்க முடியாத அளவுக்கு ஈர்ப்பு விசை மிகவும் வலுவானதாகும்.