பலூச் தேசியம் (Baloch nationalism, பலூச்சி மொழி: بلۏچی راجدۏستی, ரோமானியமயமாக்கப்பட்டது: Balòci ràjdòsti) என்பது பாக்கித்தான், ஈரான், ஆப்கானிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட பலூச் இனக் குழுவினர் தங்களுக்கு ஒரு தனித் தேசத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்ட ஒரு கருத்தியல் ஆகும். நவீன பலூச் தேசியத்தின் தோற்றம் என்பது பலுசிஸ்தானில் பல்வேறு போர்க்குணமிக்க அமைப்புகளை உள்ளடக்கிய கிளர்ச்சியுடன் இணைந்ததாக உள்ளது. அது பிரித்தானிய இந்தியா பிரிவினையும் அதையடுத்த பாகித்தான் விடுதலை, மிகப்பெரிய பலூச் சமஸ்தானமான கலாட், பாக்கித்தானின் மேலாட்சி அரசுடன் இணைந்த காலம் வரை செல்கிறது.[1]
பலூசிஸ்தானின் தெற்கு, கிழக்கு பகுதிகளில் பலூச் தேசியவாதம் பெரும்பாலும் பிரபலமாக உள்ளது.
பலூச் தேசியவாத இயக்கத்தின் கோரிக்கைகள் என்பவை பண்பாடு, பொருளாதாரம், அரசியல் போன்றவற்றில் கூடுதல் உரிமைகள், அரசியல் சுயாட்சி போன்றவற்றிற்காக சுதந்திர பலூசிஸ்தான் நாட்டை உருவாக்குதல் ஆகும். இந்த தேசிய இயக்கமானது சமயச் சார்பற்றதாகவும், பாக்கித்தானின் பிற பகுதிகளில் உள்ள அதன் மற்ற சகாக்களைப் போலவே பெரிதும் இடதுசாரி மார்க்சிய சித்தாந்தத்தால தாக்கம் பெற்றது.
ஓமான், ஐக்கிய அரபு அமீரகம், சுவீடன், நோர்வே, மற்றும் பிற நாடுகளில் உள்ள பலூச் புலம்பெயர்ந்த மக்களிடத்தில் கணிசமான ஆதரவைப் பெற்றுள்ளதாக இந்த இயக்கம் கூறுகிறது. பலூச் தேசியவாதிகள் இந்தியாவிடமிருந்து நிதியுதவி பெறுவதாக பாக்கித்தான் பலமுறை கூறியுள்ளது.[2] ஆனால் இதை இந்தியா மறுத்துவருகிறது. இதேபோல், பலூச் தேசியப் போராளிகளுக்கு மறைமுக ஆதரவு அளிப்பதை ஆப்கானித்தான் ஒப்புக் கொண்டுள்ளது. 1960கள் மற்றும் 1970களில் ஆப்கானிஸ்தான் குடியரசு பலூச் போராளிகளுக்கு புகலிடம் அளித்தது. பலூச் போராளிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கும் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் வழங்குவதற்கும் ஆப்கானித்தான் குடியரசு கந்தரத்தில் பயிற்சி முகாம்களை நிறுவியது.
பலூச் தேசியம் அதன் நவீன வடிவத்தில் 1929 இல் மஸ்துங்கை தளமாகக் கொண்ட அஞ்சுமான்-இ-இத்தேஹாத்-இ-பலூச்சன் (பலூச்சின் ஒற்றுமைக்கான அமைப்பு) வடிவத்தில் யூசப் அஜிஸ் மக்சி, அப்துல் அஜிஸ் குர்த் மற்றும் பலர் தலைமையில் தொடங்கியது.[3] 1929 நவம்பரில், யூசஃப் அஜீஸ் மாக்ஸி தங்கள் குழுவின் நோக்கங்களைக் கூறும் ஒரு கட்டுரையை வெளியிட்டார், அதாவது:
அஞ்சுமான் அமைப்போடு, கராச்சியில் உள்ள பலூச் அறிவுஜீவிகள் பலூச் லீக் என்ற தேசியவாத அமைப்பை உருவாக்கினர்.[4]
1937 பிப்ரவரியில், அஞ்சுமான் மறுசீரமைக்கப்பட்டு கலாட் மாநில தேசியக் கட்சியாக மாறியது. அஞ்சுமானின் சுதந்திர ஐக்கிய நாடாக பலுசிஸ்தான் என்ற அரசியல் நிகழ்ச்சி நிரலை தொடர்ந்தது. அவர்கள் 1955 இல் பாக்கித்தானில் இணைக்கப்பட்ட பண்டைய கலட் கானரசின், சுதந்திரத்தை கோரினர்.[4] கௌஸ் பக்ஷ் பிசென்ஜோ, மிர் குல் கான் நசீர், அப்துல் அஜிஸ் குர்த் போன்றோரின் சமயச்சார்பற்ற எண்ணம், ஏகாதிபத்திய எதிர்ப்பு, ஜனரஞ்சகக் கூறுகள் போன்றவை கட்சியில் ஆதிக்கம் செலுத்தின. கலாட் மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றபோது, அந்தக் கட்சி கணிசமான பெரும்பான்மையுடன் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.[4]
2017 ஆம் ஆண்டில், உலக பலோச் அமைப்பு இலண்டனில் உள்ள டாக்சிகளில் #FreeBalochistan என்று "பலவந்தமாக காணாமல் போவித்தல்களை நிறுத்து" மற்றும் "பலோச் மக்களைக் காப்பாற்று" போன்ற முழக்கங்களுடன் விளம்பரம் செய்தது. இவை துவக்கத்தில் அனுமதிக்கப்பட்டன, ஆனால் பின்னர் இலண்டனுக்கான போக்குவரத்து நிறுவனத்தால் அனுமதி மறுக்கப்பட்டது. இசுலாமாபாத்தில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் முன் வரவழைக்கப்பட்டு, பாக்கிதான் அரசாங்கத்தினால் கொடுக்கபட்ட அழுத்தத்தின் விளைவாக இது ஏற்பட்டதாக உலக பலூச் அமைப்பு கூறியது.[5]
நியூஸ் இன்டர்நேஷனல் என்ற ஒரு உள்ளூர் கருத்துக்கணிப்பு அமைப்பு என்று 2012 இல் காலப் என்ற கருத்துக்கணிப்பை நடத்தியது. அதில் பெரும்பான்மையான பலூச் மக்கள் பாக்கித்தானில் இருந்து பிரிந்து சுதந்திரம் பெறுவதை ஆதரிக்கவில்லை என்பது தெரிவிக்கபட்டது. பலூச்சில் சுமார் 14 விழுக்காட்டினர் விடுதலைக்கு ஆதரவு அளித்தனர். பலூசிஸ்தானின் பஷ்தூன் மக்களிடையே விடுதலைக்கான மக்கள் ஆதரவு 3 விழுக்காடு உள்ளது. இருப்பினும், பலூசிஸ்தானின் மக்கள்தொகையில் பெரும்பான்மையினர் (67 விழுக்காடு) மாகாண தன்னாட்சிக்கு ஆதரவாக உள்ளனர்.[6][7]
பியூ ஆராய்ச்சி மையம் 2009 இல் நடத்திய ஒரு ஆய்வில், பலூசிஸ்தானில் பதிலளில் கூறியவர்களில் 58% பேர் தங்களது அடையாளம் "பாகிஸ்தானியர்" என்பதைத் தேர்ந்தெடுத்தனர், 32% பேர் தங்கள் இனத்தைத் தேர்ந்தெடுத்தனர், 10% இரண்டையும் சமமாகத் தேர்ந்தெடுத்தனர்.[8]
According to a July 2012 survey, only 37 percent of the Baloch favor independence, and a mere 12 percent of Balochistan's Pashtuns favor that option. However, 67 percent of the total population supports greater provincial autonomy.