பலோத்திரா | |
---|---|
![]() பலோத்திரா நகரத்தின் காட்சி | |
ஆள்கூறுகள்: 25°50′N 72°14′E / 25.83°N 72.23°E | |
நாடு | ![]() |
மாநிலம் | இராஜஸ்தான் |
மாவட்டம் | பலோத்ரா |
அரசு | |
• வகை | தலைவர் |
• நிர்வாகம் | நகராட்சி |
ஏற்றம் | 106 m (348 ft) |
மக்கள்தொகை (2011) | |
• நகராட்சி | 74,496 |
• பெருநகர் | 4,25,362 |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | இந்தி, ஆங்கிலம், இராசத்தானி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 344022 |
தொலைபேசி குறியீடு | 02988 |
வாகனப் பதிவு | RJ-39 |
பலோத்ரா (Balotra), இராஜஸ்தான் மாநிலத்தின் பார்மேர் மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டு 7 ஆகஸ்டு 2023 அன்று புதிதாக நிறுவப்பட்ட பலோத்ரா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும்[1]மேலும் இந்நகரம் பச்பத்ரா வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமாகவும் உள்ளது. பலோத்ரா நகரம் இராஜஸ்தான் மாநிலத்தில் மேற்கில், இந்தியா-பாகிஸதான் எல்லைப்புறத்தில், தார் பாலைவனத்தில் உள்ளது.
2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 35 வார்டுகளும், 12911 வீடுகளும் கொண்ட பலோத்ரா நகராட்சியின் மக்கள் தொகை 74,496 ஆகும். அதில ஆண்கள் 38,715 மற்றும் பெண்கள் 35,781 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 924 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 75.52 %. பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 14.20 % மற்றும் 3.37 % ஆக உள்ளனர். இதன்மக்கள் தொகையில் இந்துக்கள் 76.74%, [சைனம்|சமணர்கள்]]11.83% முஸ்லீம்கள் 11.01% மற்றும் பிறர் 0.43% ஆக உள்ளனர்.[2]
பலோத்திரா தொடருந்து நிலையம்[3]ஜோத்பூர், ஜெய்ப்பூர் சண்டிகர் நகரங்களுடன் இணைக்கிறது.