பல்கா சுமன்

பல்கா சுமன், தெலுங்கானாவைச் சேர்ந்த அரசியல்வாதி. இவர் 1983-ஆம் ஆண்டின் அக்டோபர் பதினெட்டாம் நாளில் பிறந்தார். இவர் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியைச் சேர்ந்தவர். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், பெத்தபள்ளி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர். இவர் கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள மேட்பள்ளி என்னும் மண்டலத்தில் உள்ள ரேகுண்டா என்னும் ஊரைச் சேர்ந்தவர்.[1]

சான்றுகள்

[தொகு]