பழுப்பு புள்ளி வங்காள மரத் தவளை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | ராகோபோரிடே
|
பேரினம்: | பாலிபீடேட்சு
|
இனம்: | பா. பெங்காலென்சிசு
|
இருசொற் பெயரீடு | |
பாலிபீடேட்சு பெங்காலென்சிசு புர்காயசுதா மற்றும் பலர், 2019 | |
வேறு பெயர்கள் | |
இராக்கோபோரசு டேனியாடசு |
பாலிபீடேட்சு பெங்காலென்சிசு (Polypedates bengalensis), பழுப்பு புள்ளி வங்காள மரத் தவளை, இராகோபோரிடே குடும்பத்தில் உள்ள ஒரு தவளை சிற்றினம் ஆகும். இது இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[1]
பெங்கலென்சிசு என்ற குறிப்பிட்ட சிற்றினப் பெயர், இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் அமைந்துள்ள சிற்றின வகை வட்டாரத்தைக் குறிக்கிறது.
கிழக்கு இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட இந்தச் சிற்றினம், மேற்கு வங்காளத்தில் உள்ள கோர்டனாஹலா, தெற்கு 24 பர்கனா மற்றும் படு, வடக்கு 24 பர்கானா ஆகிய பகுதிகளில் முதலில் விவரிக்கப்பட்டது. இதன் பின்னர் இது இந்தியாவின் ஒடிசாவிலும் பதிவாகியுள்ளது.[2]
இத்தவளை நடுத்தர அளவிலானது. ஆண் தவளை 4.8-5.4 செ.மீ. நீளமும், பெண் தவளை 7.2 செ.மீ. நீளமும் உடையது. இது மஞ்சள்-பழுப்பு முதல் பச்சை-பழுப்பு நிறத்திலிருக்கும். இதன் உடல் ஆறு முதல் ஒன்பது அடர் பழுப்பு நிறப் புள்ளிகளைக் கொண்டுள்ளது. விரலிடைச் சவ்வு காணப்படுவதில்லை. முன்கையில் தோல் மடிப்பு இல்லை. ஆண் தவளை ஓரிணை குரல் பைகளைக் கொண்டுள்ளன.[3][4][5]