பவண் முஞ்சால் Pawan Munjal | |
---|---|
பிறப்பு | 1954 (அகவை 70–71) |
தேசியம் | இந்தியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | தேசிய தொழில்நுட்ப நிறுவனம், குருசேத்ரா |
பணி | தலைவர், தலைமை நிர்வாக அதிகாரி, ஈரோமோட்டோ கார்ப் |
பெற்றோர் | பிரிச்மோகன் லால் முஞ்சால் |
பவன் காந்த் முஞ்சால் (Pawan Kant Munjal) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் ஆவார். இவர் 1954 ஆம் ஆண்டில் பிறந்தார். ஒரு கோடீசுவரராகவும் ஈரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் தலைவராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் அறியப்படுகிறார்.[1] மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் உற்பத்தியில்,உலகின் மிகப்பெரிய உற்பத்தி நிறுவனம் ஈரோ மோட்டோ கார்ப் நிறுவனம் ஆகும். இந்தியா டுடே இதழ், 2017 [2] ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள 50 சக்திவாய்ந்த மனிதர்களின் பட்டியலை வெளியிட்டது. அதில் இவர் 49 ஆவது இடத்தைப் பிடித்தார்.
2022 ஆம் ஆண்டு மே மாத கணக்கெடுப்பின்படி, இவருடைய சொத்து நிகர மதிப்பு US$3.4 பில்லியன்[3] என மதிப்பிடப்பட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் நடத்திய வழக்கை தொடர்ந்து அமலாக்க இயக்குனரகம் [4] இவருடைய குடியிருப்பில் சோதனை நடத்தியது.