பவன் குமார் (இயக்குநர்)

பவன் குமார்
பிறப்பு29 அக்டோபர் 1982 (1982-10-29) (அகவை 42)
பணி
செயற்பாட்டுக்
காலம்
2007–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
சௌமியா ஜெகன்மூர்த்தி (தி. 2010)
பிள்ளைகள்1

பவன் குமார் (Pawan Kumar ) (பிறப்பு 29 அக்டோபர் 1982) ஓர் இந்திய திரைப்பட இயக்குநரும், திரைக்கதை ஆசிரியரும், திரைப்படத் தயாரிப்பாளரும் மற்றும் நடிகரும் ஆவார். இவர் முதன்மையாக கன்னடத் திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார்.[1]

பவன் குமார் மனசாரே மற்றும் பஞ்சரங்கி ஆகிய திரைப்படங்களை எழுதியதற்காக நன்கு அறியப்பட்டவர். தான் இயக்குநராக அறிமுகமான லைஃபு இஷ்டேனே (2011) மற்றும் 2013 ஆம் ஆண்டு வெளியான உளவியல் சார்ந்த அதிரடித் திரைப்படமான லூசியா ஆகிய படங்கள் இவரது தொழில் வாழ்க்கையின் மிகப்பெரிய திருப்புமுனைகளில் ஒன்றாக அமைந்தது. நாடகப் பின்னணியில் இருந்து வந்த இவர், இயக்குநர் யோகராஜ் பட் என்பவருடன் இணை இயக்குநராகப் பணியாற்றுவதற்கு முன்பு மேடையில் நாடகங்களுக்கு வசனம் எழுதி வந்தார்.[2] 2023 இல் பவன் குமார் தூமம் என்ற மலையாளத் திரைப்படத்தை எழுதி இயக்கினார். இது இவரது மோசமான படமாக விமர்சகர்களால் கருதப்படுகிறது.[3]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]