பவன் குமார் பன்சால் Pawan Kumar Bansal | |
---|---|
இடைக்காலப் பொருளாளர் அனைத்து இந்திய காங்கிரசு குழு | |
பதவியில் நவம்பர் 2020 – 1 அக்டோபர் 2023 | |
முன்னையவர் | அகமது படேல் |
பின்னவர் | அச்சய் மேகன் |
இந்திய இரும்புவழி அமைச்சர்களின் பட்டியல் | |
பதவியில் 28 அக்டோபர் 2012 – 10 மே 2013 | |
பிரதமர் | மன்மோகன் சிங் |
முன்னையவர் | சி.பி. ஜோசி |
பின்னவர் | சி.பி. ஜோசி |
நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம், இந்தியா | |
பதவியில் 28 மே 2009 – 28 அக்டோபர் 2012 | |
பிரதமர் | மன்மோகன் சிங் |
முன்னையவர் | குலாம் நபி ஆசாத் |
பின்னவர் | கமல் நாத் |
இந்தியன் நாடாளுமன்றம் சண்டிகர் | |
பதவியில் 1999–2014 | |
முன்னையவர் | சத்யபால் ஜெயின் |
பின்னவர் | கிர்ரான் கெர் |
பதவியில் 1991–1996 | |
முன்னையவர் | ஹர்மோகன் தவான் |
பின்னவர் | சத்யபால் ஜெயின் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 16 சூலை 1948 சுனாம், கிழக்கு பஞ்சாப், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | மது பன்சால் |
பிள்ளைகள் | 2 மகன்கள் |
வாழிடம் | சண்டிகர் |
As of 28 மே, 2009 |
பவன் குமார் பன்சால் (Pawan Kumar Bansal) இந்தியாவின் சண்டிகர் நகரத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1948 ஆம் ஆண்டு சூலை மாதம் 16 ஆம் நாளன்று இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் அரசியல்வாதியாக அறியப்படுகிறார். 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இடைக்கால பொருளாளராக நியமிக்கப்பட்டார். மன்மோகன் சிங் அரசாங்கத்தில் ஒரு முன்னாள் அமைச்சராக இருந்தார்.[1][2] இந்தியாவின் 15ஆவது மக்களவையில் (2009-2014) சண்டிகர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். 28 அக்டோபர் 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி முதல் 2013 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் தேதி வரை இரயில்வே அமைச்சராகப் பணியாற்றினார்.[3][4]
பன்சால் 1948 ஆம் ஆண்டு சூலை மாதம் 16 ஆம் தேதியன்று சங்குரூர் மாவட்டத்திலுள்ள சுனாம் நகரத்தில் பிறந்தார்.[5] இவரது குடும்பம் பஞ்சாபின் தாபாவிலிருந்து வந்தது. பாட்டியாலாவில் உள்ள யாதவிந்திரா பொதுப் பள்ளியில் பன்சால் படிக்கச் சென்றார்.[6] மேலும் சண்டிகரில் உள்ள செக்டார் 11, முதுகலை அரசு கல்லூரியில் இளம் அறிவியல் படித்தார். சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் சட்டத் துறையில் சட்டப் பட்டமும் பெற்றுள்ளார்.[7][8]
பன்சால் 10, 13, 14 மற்றும் 15ஆவது மக்களவையில் சண்டிகரை நாடாளுமன்ற உறுப்பினராக பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். இரண்டாவது மன்மோகன் சிங் அமைச்சரவையில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராகவும், நீர்வளத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். முதல் மன்மோகன் சிங் அமைச்சரவையில் நிதி மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சராகவும் அவர் பொறுப்பிலிருந்தார்.
1996 ஆம் ஆண்டு முதல் இவர் தனது கட்சியில் இருந்து முதலாவதாக இரயில்வே அமைச்சராகப் பொறுப்பேற்றார். இரயில்வே அமைச்சரானவுடன், இந்திய இரயில்வேயை லாபகரமாக நடத்துவதற்காக, கடந்த 15 ஆண்டுகளாக மாற்றமில்லாமல் இருந்த இரயில் கட்டண உயர்வுக்கு ஒப்புதல் அளித்தார். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சண்டிகரில் போட்டியிட்டார்.[9] அடுத்த தேர்தலில் இவர் மீண்டும் தனது முன்னாள் தொகுதியில் போட்டியிட்டார், ஆனால் மீண்டும் தோல்வியடைந்தார்.
2013 ஆம் ஆண்டிற்கான இரயில்வே வரவு செலவுத் திட்டம் இந்திய ரயில்வேயின் நிலையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியது. பவன் பன்சால் அருணாச்சலப் பிரதேசத்தை இணைக்கும் முதல் இரயில் இணைப்பைக் கொண்டு வந்தார்.[10] 0030 மணிநேரம் முதல் 2330 மணிநேரம் வரையிலான இணையவழி பயணச்சீட்டுகள் பதிவு செய்தல் மற்றும் கைபேசி வழியாக மின்-பயணச்சீட்டு எடுக்கும் வசதி செய்யப்பட்டது.[11][12]
இரயில் பயணிகளின், குறிப்பாக பெண் பயணிகளின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக, நான்கு பெண் இரயில்வே பாதுகாப்புப் படை இரயில்வே பாதுகாப்புப் படை பணியாளர்கள் அமைக்கப்பட்டு, மேலும் 8 நிறுவனங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.[13] ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையும் மத முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களையும் மேம்படுத்துவதற்காக இந்திய ரயில்வே 104 இரயில் நிலையங்களை அடையாளம் கண்டது. அதாவது, அரசாங்கம் வெளியிட்ட வரவு செலவுத் திட்ட சிறப்பம்சங்களின்படி, இந்த ரயில் நிலையங்கள் தூய்மை தொடர்பான அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்தும்.[14] ஏ-1 மற்றும் பிற முக்கிய நிலையங்களில் 179 படிக்கட்டுகள் மற்றும் 400 மின்தூக்கிகள் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக நிறுவப்படும் என்றும் அப்போது தெரிவிக்கப்பட்டது.[15]
மதுபன்சால் என்ற பெண்ணை இவர் திருமணம் செய்து கொண்டார். [16] இத்தம்பதியருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர்.