பவப்பிரியா கருநாடக இசையின் 44 ஆவது மேளகர்த்தா இராகமாகும் . இந்த மேளத்தின் ஜன்யமான பவானி என்ற இராகம், அசம்பூர்ண மேள பத்ததியில் 44 ஆவது மேளமாகக் கையாளப்படுகிறது.[ 1] [ 2] [ 3]
பவப்பிரியா சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
வசு எனப்படும் 8ஆவது சக்கரத்தில் 2ஆவது மேளம்.
இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1 ), சாதாரண காந்தாரம்(க2 ), பிரதி மத்திமம்(ம2 ), பஞ்சமம், சுத்த தைவதம்(த1 ), கைசிகி நிஷாதம்(நி2 ) ஆகிய சுரங்கள் வருகின்றன.
திரிஸ்தாயி இராகம். கருணை சுவையை வெளிப்படுத்தும் இராகம்.
விவாதி மேளம் (பகை ஸ்வரங்களைக் கொண்ட மேளம்).
இது தோடி (ஹனுமத்தோடி) இராகத்தின் நேர் பிரதி மத்திம இராகம் ஆகும்.
இந்த இராகத்தின் காந்தாரமும், தைவதமும் கிரகபேதத்தின் வழியாக வாகதீச்வரி (34) மேளத்தையும், நாகாநந்தினி (30) மேளத்தையும் தோற்றுவிக்கின்றன.
கிருதி : பூலோக கயிலாச , மிஸ்ரஜம்பை, முத்துத் தாண்டவர் .
கிருதி : செந்திருவேலன் , ஆதி, கோடீஸ்வர ஐயர் .
கிருதி : முக்குணமாயை , ஆதி, சுத்தானந்த பாரதியார் .
கிருதி : சிறீகாந்தநி , ஆதி, தியாகராஜர் .
கிருதி : வெண்னை திருடி , திரிபுடை, பெரியசாமி தூரன் .
பவப்பிரியாவின் ஜன்ய இராகங்கள் :
↑ Sri Muthuswami Dikshitar Keertanaigal by Vidwan A Sundaram Iyer, Pub. 1989, Music Book Publishers, Mylapore, Chennai
↑ Ragas in Carnatic music by Dr. S. Bhagyalekshmy, Pub. 1990, CBH Publications
↑ Raganidhi by P. Subba Rao, Pub. 1964, The Music Academy of Madras
சுத்த மத்திம இராகங்கள்
இந்து
நேத்ர
அக்னி
வேத
பாண
ருது
பிரதி மத்திம இராகங்கள்
ரிஷி
வசு
பிரஹ்ம
திசி
ருத்ர
ஆதித்ய