நீதியரசர் பஹருல் இஸ்லாம் | |
---|---|
![]() | |
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை | |
பதவியில் 3 ஏப்ரல் 1962 – 20 ஜனவரி 1972 | |
நீதியரசர், இந்திய உச்ச நீதிமன்றம் | |
பதவியில் 4 டிசம்பர் 1980 – 12 ஜனவரி 1983 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 மார்ச்சு 1918 |
இறப்பு | 5 பெப்ரவரி 1993 | (அகவை 74)
தேசியம் | இந்தியன் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் [1] |
பிள்ளைகள் | முபினா இஸ்லாம், நஜ்ருள் இஸ்லாம், ரூமி இஸ்லாம், ரூபி இஸ்லாம், இனமுல் இஸ்லாம். |
முன்னாள் மாணவர் | சட்டத்துறை, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் |
நீதிபதி பஹருல் இஸ்லாம் ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி ஆவார்.[2] [3]இவர் இந்திய பாராளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினராக இந்திய தேசிய காங்கிரஸ் சார்பாக தேர்வு செய்யப்பட்டார். பிறகு 1972 ஆம் ஆண்டு இவர் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து விட்டு குவாகத்தி உயர் நீதிமன்றம் தலைமை நீதிபதியாக நியமிக்கபட்டார். இஸ்லாம் உச்சநீதிமன்ற நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் உயர் நீதிமன்றம் இவரை திரும்ப அழைத்து நீதிபதியாக ஆக்கியது.
இவர் நகர்ப்புற கூட்டுறவு வங்கி ஊழல் வழக்கில் அப்போதைய பீகார் காங்கிரஸ் முதல்வர் ஜகன்னாத் மிஸ்ராவை விடுவித்து தீர்ப்பு அளித்தார்.[4] இந்த தீர்ப்பிற்கு பின்னர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் இருந்து ராஜினாமா செய்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5][6][7]
இஸ்லாம் அசாமின் காமரூப் மாவட்டத்தில் உடியானா பி.எஸ். ரங்கியா கிராமத்தில் பிறந்தார். பின்னர் குர்டன் உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.
அசாமின் காமரூப் மாவட்டத்தின் குர்டன் உயர்நிலைப்பள்ளி கல்வி பயின்று காட்டன் கல்லூரியில் பட்டம் பெற்றார். சட்டப்படிப்பை அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றார் .
இஸ்லாம் 1951 ஆம் ஆண்டு அசாம் உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞராகவும், 1958 இல் உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞராகவும் சட்டப்பணியை தொடங்கினார். இவர் 1956 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1962 ஆம் ஆண்டு முதலாம் முறையாகவும், 1968 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக மாநிலங்களவைக்கு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் 1972 ஆம் ஆண்டில் மாநிலங்களவையில் இருந்து ராஜினாமா செய்த இவர் அப்போதைய அசாம் மற்றும் நாகாலாந்து உயர் நீதிமன்றத்தின் (இப்போது குவஹாத்தி உயர் நீதிமன்றம்) நீதிபதியாக 20 ஜனவரி 1972 அன்று நியமிக்கப்பட்டார். இவர் 11.3.1979 அன்று குவஹாத்தி உயர்நீதிமன்றத்தின் செயல் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு, ஜூலை 7, 1979 இல் குவஹாத்தி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கபட்டார். இவர் 1980 ஆம் ஆண்டு மார்ச் 1, அன்று ஓய்வு பெற்றார். ஆனால் 1980 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி இவர் இந்திய உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஓய்வுபெற்ற நீதிபதி பொதுவாக உச்சநீதிமன்றத்தில் நியமிக்கப்படுவதில்லை. ஆனால் இஸ்லாம் அவர்களுக்கு மட்டும் இப்படி செய்யப்பட்டது. மேலும் இவர் பதினைந்து மாதங்களுக்குப் பிறகு ஓய்வு பெற முடி செய்தார். காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அசாமின் பார்பேட்டாவிலிருந்து மக்களவைக்கு போட்டியிட 1983 ஜனவரி 12 அன்று இவர் உச்சநீதிமன்றத்தில் இருந்து ராஜினாமா செய்தார் [8] இருப்பினும் 1984 இந்திய பொதுத் தேர்தலில் அசாமில் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டபோதும் இவர் ஒரு மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். [9]
இவர் கவுகாத்தி உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் உறுப்பினராக இருந்தார். ஆனால் அந்த சங்கத்தின் தலைவராக பணியாற்றவில்லை.[10]
1987 ஆம் ஆண்டு நீதிபதி பஹருல் இஸ்லாம் ஊனமுற்றோரின் உரிமைகள், சம வாய்ப்புகள் மற்றும் முழு பங்களிப்பை வலியுறுத்தும் சட்டத்தை உருவாக்கப்பட்ட குழுவில் நியமிக்கபட்டார்.