![]() | இந்தக் கட்டுரையில் சான்றுகள் தரும் முறை தெளிவில்லாமல் உள்ளது. மேற்சான்றுகளை மேற்கோளிடப்படும் வரிகளின் அண்மையில் தெளிவாக தருதல் வேண்டும். பல பாணிகளில் மேற்சான்றுகளை எவ்வாறு தருவது என அறிய வரியிடைச் சான்று, அடிக்குறிப்பு, அல்லது வெளி இணைப்புகள் உதவிப் பக்கங்களைக் காணவும். (செப்டம்பர் 2019) |
பஹ்ராம் ஜங் பள்ளிவாசல் (Bahram Jung Mosque) என்பது சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள ஒரு தொழுகைப் பள்ளிவாசல் ஆகும். இது 1789 மற்றும் 1795 க்கு இடையில் முகம்மது அப்துல்லா காதிர் நவாஸ் கான்பகதூர் பஹ்ராம் ஜங்கினால் கட்டப்பட்டதாகும், இவர் ஆற்காடு நவாப் முகமது அலி கான் வாலாஜாவின் அவையில் கவிஞராக இருந்தார்.
பஹ்ராம் ஜங் மற்றும் அவரது சகோதரர் ஹபீஸ் அகமத் கான் இருவரும், வாலஜாவின் மறைவிற்குப் பின் அவரை அடுத்த வந்து உம்தாத்துல் உம்ராவின் ஆட்சிக்காலத்தில் ஆற்காடு நவாப்பிற்காக பெரும் சொத்துக்களை இழந்தார். இறுதியில் இவர்களின் நிலங்கள் கிழக்கிந்திய கம்பெனியால் கைப்பற்றப்பட்டன.