பா. டெனீஸ்வரன் B. Deniswaran | |
---|---|
இலங்கை, வட மாகாண சபை மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 11 அக்டோபர் 2013 | |
மன்னார் மாவட்ட வட மாகாண சபை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 11 அக்டோபர் 2013 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | தமிழீழ விடுதலை இயக்கம் |
பிற அரசியல் தொடர்புகள் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
முன்னாள் கல்லூரி | புனித சேவியர் ஆண்கள் தேசியப் பாடசாலை, மன்னார் |
தொழில் | வழக்கறிஞர் |
இனம் | இலங்கைத் தமிழர் |
பாலசுப்பிரமணியம் டெனீஸ்வரன் (Balasubramaniam Deniswaran) இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், அரசியல்வாதியும், மாகாண சபை உறுப்பினரும் ஆவார்.
இலங்கையின் மன்னாரில் வழக்கறிஞராகப் பணியாற்றும் டெனீஸ்வரன்[1] மன்னார் புனித சேவியர் ஆண்கள் தேசியப் பாடசாலையில் கல்வி கற்றவர்.
2013 வட மாகாண சபைத் தேர்தலில் தமிழீழ விடுதலை இயக்கத்தினால் பரிந்துரைக்கப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டு 12,827 விருப்பு வாக்குகள் பெற்று வட மாகாண சபை உறுப்பினரானார்.[2][3]
இவர் வட மாகாண சபையின் மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி அமைச்சராக முதலமைச்சர் சி. வி. விக்னேசுவரனால் பரிந்துரைக்கப்பட்டு[4][5] 2013 அக்டோபர் 11 ஆம் நாள் மாகாண சபை உறுப்பினராகவும், அமைச்சராகவும் முதலமைச்சர் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.[6][7]