பாகன் செராய் (P058) மலேசிய மக்களவைத் தொகுதி பேராக் | |
---|---|
Bagan Serai (P058) Federal Constituency in Perak | |
மாவட்டம் | கிரியான் மாவட்டம் பேராக் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 80,293 (2022)[1] |
வாக்காளர் தொகுதி | பாகன் செராய் தொகுதி[2] |
முக்கிய நகரங்கள் | பாகன் செராய், பாரிட் புந்தார், நிபோங் திபால், கோலா குராவ், செமாங்கோல், அலோர் பொங்சு |
பரப்பளவு | 770 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1974 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | இட்ரிஸ் அகமது (Idris Ahmad) |
மக்கள் தொகை | 92,986 (2020) [4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1974 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5] |
பாகன் செராய் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Bagan Serai; ஆங்கிலம்: Bagan Serai Federal Constituency; சீனம்: 峇眼色海国会议席) என்பது மலேசியா, பேராக், கிரியான் மாவட்டத்தில் (Kerian District) அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P058) ஆகும்.[6]
பாகன் செராய் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
1974-ஆம் ஆண்டில் இருந்து பாகன் செராய் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
பாகன் செராய், பேராக், கிரியான் மாவட்டத்தில், பினாங்கு பெருநகரத்தில் இருந்து 52 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கிரியான் நெல் அறுவடை திட்டத்தின் கீழ், பாகன் செராய் நகரம் ஒரு முக்கியமான நெல் சேகரிப்பு மையமாக விளங்குகிறது. மலேசியாவின் மிகப் பழைமையான நீர்ப் பாசனத் திட்டமான கிரியான் நீர்ப் பாசனத் திட்டம் (Kerian Irrigation Scheme) இங்குதான் உள்ளது.[7]
பாகன் செராய் நகருக்கு அருகில் செமாங்கோல்; அலோர் பொங்சு; பாரிட் புந்தார்; கோலா குராவ்; கோலா கூலா நகரங்கள் உள்ளன. பாகன் செராய் மக்களவைத் தொகுதியின் பெயரும் பாகன் செராய் என அழைக்கப் படுகிறது. இந்த நகரத்தைச் சுற்றிலும் நிறைய ரப்பர், செம்பனைத் தோட்டங்கள் உள்ளன.
இங்கு வசிக்கும் மலாய் குடியிருப்பாளர்களில் பெரும்பாலோர் இந்தோனேசியாவின் பஞ்சார்மாசின் எனும் இடத்தில் இருந்து குடிபெயர்ந்தவர்கள். இங்குள்ள கடைகள் பெரும்பாலும் சீனர், மலாய் மக்களுக்குச் சொந்தமானவையாக உள்ளன.
இந்தியர்கள் கணிசமான அளவு ரப்பர் தோட்டங்களில் வேலை செய்கிறார்கள். மலாய் மக்கள் வேளாண் நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர். பாகன் செராயில் அதிகமாக நெல் வயல்கள்; செம்பனைத் தோட்டங்கள் உள்ளன.
பாகன் செராய் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1974 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1974-ஆம் ஆண்டில் கிரியான் தாராட் மக்களவைத் தொகுதியில் இருந்து பாகன் செராய் தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
4-ஆவது மக்களவை | P047 | 1974–1978 | Ramli Omar (Ramli Omar) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
5-ஆவது மக்களவை | 1978–1982 | |||
6-ஆவது மக்களவை | 1982–1986 | Zainal Abidin Zin (Zainal Abidin Zin) | ||
7-ஆவது மக்களவை | P052 | 1986–1990 | ||
8-ஆவது மக்களவை | 1990–1995 | கமாருசமான் இசுமாயில் (Qamaruzaman Ismail) | ||
9-ஆவது மக்களவை | P055 | 1995–1999 | ||
10-ஆவது மக்களவை | 1999–2004 | சைனல் அபிடின் சின் (Zainal Abidin Zin) | ||
11-ஆவது மக்களவை | P058 | 2004–2008 | ||
12-ஆவது மக்களவை | 2008–2010 | மோசின் பட்சிலி சம்சுரி (Mohsin Fadzli Samsuri) |
பாக்காத்தான் ராக்யாட் (பி.கே.ஆர்) | |
2010-2013 | சுயேச்சை | |||
13-ஆவது மக்களவை | 2013–2018 | நூர் அசுமி கசாலி (Noor Azmi Ghazali) |
பாரிசான் நேசனல் (அம்னோ) | |
14-ஆவது மக்களவை | 2018 | |||
சுயேச்சை | ||||
2018–2020 | பாக்காத்தான் அரப்பான் (பெர்சத்து) | |||
2020–2022 | பெரிக்காத்தான் நேசனல் (பெர்சத்து) | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | இட்ரிஸ் அகமது (Idris Ahmad) |
பெரிக்காத்தான் நேசனல் (மலேசிய இசுலாமிய கட்சி) |
பொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
80,293 | ||
வாக்களித்தவர்கள் (Turnout) |
63,521 | 77.88% | ▼ - 3.72% |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
62,533 | 100.00% | |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
93 | ||
செல்லாத வாக்குகள் (Total Rejected Ballots) |
895 | ||
பெரும்பான்மை (Majority) |
18,551 | 29.31% | + 2.95 |
வெற்றி பெற்ற கட்சி | பெரிக்காத்தான் நேசனல் | ||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம் [8] |
வேட்பாளர் | கட்சி | செல்லுபடி வாக்குகள் |
பெற்ற வாக்குகள் |
% | ∆% | |
---|---|---|---|---|---|---|
இட்ரிஸ் அகமது (Idris Ahmad) |
பெரிக்காத்தான் | 62,533 | 33,753 | 53.98% | + 53.98% | |
சுல் எல்மி கசாலி (Zul Helmi Ghazali) |
பாரிசான் | - | 15,202 | 24.31% | - 12.13 % ▼ | |
சித்தி ஆயிசா செயிக் இசுமாயில் (Siti Aishah Shaik Ismail) |
பாக்காத்தான் | - | 13,195 | 21.10% | - 6.38% ▼ | |
அகமது லுக்மான் அகமது யகயா (Ahmad Luqman Ahmad Yahya) |
தாயக இயக்கம் | - | 383 | 0.61% | + 0.61% |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)