பாகன் டத்தோ (P075) மலேசிய மக்களவைத் தொகுதி பேராக் | |
---|---|
Bagan Datuk (P075) Federal Constituency in Perak | |
மாவட்டம் | பாகன் டத்தோ மாவட்டம் பேராக் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 58,183 (2022)[1] |
வாக்காளர் தொகுதி | பாகன் டத்தோ தொகுதி[2] |
முக்கிய நகரங்கள் | பாகன் டத்தோ, தெலுக் இந்தான், ஊத்தான் மெலிந்தாங், செலெக்கோ, சிம்பாங் தீகா |
பரப்பளவு | 635 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1958 |
கட்சி | பாரிசான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | அகமத் சாகித் அமிடி (Ahmad Zahid Hamidi) |
மக்கள் தொகை | 876,495 (2020) [4] |
முதல் தேர்தல் | மலாயா பொதுத் தேர்தல், 1959 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5] |
பாகன் டத்தோ மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Bagan Datuk; ஆங்கிலம்: Bagan Datuk Federal Constituency; சீனம்: 峇眼拿督联邦选区) என்பது மலேசியா, பேராக், பாகன் டத்தோ மாவட்டத்தில் (Bagan Datuk District) அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P075) ஆகும்.[7]
பாகன் டத்தோ மக்களவைத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1959-ஆம் ஆண்டில் இருந்து பாகன் டத்தோ மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
பாகன் டத்தோ நகரம், பேராக், பாகன் டத்தோ மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரை நகரம். பேராக் மாநிலத்தின் தலைநகரமான ஈப்போவில் இருந்து 132 கி.மீ.; தெலுக் இந்தான் நகரில் இருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ளது.[8]
இந்த நகரின் முக்கியமான தொழில் மீன்பிடித்தல் ஆகும். தவிர, இதன் சுற்று வட்டாரங்களில் பல தென்னைத் தோட்டங்கள் உள்ளன. பாகன் டத்தோவில் இருந்து தெலுக் இந்தான் நகருக்குச் செல்லும் வழியில் அந்தத் தோட்டங்களைக் காணலாம். இந்தப் பாகன் டத்தோ கிராம நகர்ப் பகுதியை தென்னையின் சொர்க்கவாசல் என்று அழைப்பது வழக்கம்.[9]
பாகன் டத்தோ நகரின் சுற்றுப் பகுதியில் சில மீன்பிடி கிராமங்கள் பரவி இருக்கின்றன. சுங்கை தியாங், சுங்கை பூரோங், பாகன் சுங்கை தியாங், பாகான் சுங்கை பூரோங் போன்ற மீன்பிடி கிராமங்களைச் சொல்லலாம். இந்தக் கிராமங்கள் கடற்கரை அருகில் அமைந்துள்ள கிராமங்கள்.
பாகன் டத்தோவில் இருந்து தெலுக் இந்தான் நகருக்குச் செல்லும் சாலையில் ஊத்தான் மெலிந்தாங், செலெக்கோ, சிம்பாங் தீகா போன்ற சிறுநகரங்களும் உள்ளன. சுங்கை டூலாங் எனும் இடத்தில் பெரு இறால்கள் அதிகமாகக் கிடைக்கின்றன.
பாகன் டத்தோ மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1959 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1959-ஆம் ஆண்டில் தெலுக்கான்சன் தொகுதியில் இருந்து பாகன் டத்தோ தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
பாகன் டத்தோ | ||||
மலாயா கூட்டரசின் மக்களவை | ||||
1-ஆவது மலாயா மக்களவை | P058 | 1959–1963 | யாகயா அகமட் (Yahya Ahmad) |
மலேசிய கூட்டணி (அம்னோ) |
மலேசிய மக்களவை | ||||
1-ஆவது மக்களவை | P058 | 1963–1964 | யாகயா அகமட் (Yahya Ahmad) |
மலேசிய கூட்டணி (அம்னோ) |
2-ஆவது மக்களவை | 1964–1969 | சுலைமான் பூலோன் (Sulaiman Bulon) | ||
1969–1971 | நாடாளுமன்ற இடைநிறுத்தம்[10] | |||
3-ஆவது மக்களவை | P058 | 1971–1973 | சுலைமான் பூலோன் (Sulaiman Bulon) |
மலேசிய கூட்டணி (அம்னோ) |
1973–1974 | பாரிசான் நேசனல் (அம்னோ) | |||
பாகன் டத்தோ | ||||
4-ஆவது மக்களவை | P064 | 1974–1978 | அசன் அர்சாட் (Hassan Adli Arshad) |
பாரிசான் நேசனல் (மலேசிய இசுலாமிய கட்சி) |
5-ஆவது மக்களவை | 1978–1982 | பாரிசான் நேசனல் (அம்னோ) | ||
6-ஆவது மக்களவை | 1982–1986 | யகாயா சக்காரியா (Yahya Zakaria) | ||
7-ஆவது மக்களவை | P069 | 1986–1990 | முகமது சம்ரா (Mohamed Jamrah) | |
8-ஆவது மக்களவை | 1990–1995 | |||
9-ஆவது மக்களவை | P072 | 1995–1999 | அகமத் சாகித் அமிடி (Ahmad Zahid Hamidi) | |
10-ஆவது மக்களவை | 1999–2004 | |||
11-ஆவது மக்களவை | P075 | 2004–2008 | ||
12-ஆவது மக்களவை | 2008–2013 | |||
13-ஆவது மக்களவை | 2013–2018 | |||
பாகன் டத்தோ | ||||
14-ஆவது மக்களவை | P075 | 2018–2022 | அகமத் சாகித் அமிடி (Ahmad Zahid Hamidi) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் |
பொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
58,183 | ||
வாக்களித்தவர்கள் (Turnout) |
42,695 | 73.40% | ▼ - 6.49% |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
41,856 | 100.00% | |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
91 | ||
செல்லாத வாக்குகள் (Total Rejected Ballots) |
748 | ||
பெரும்பான்மை (Majority) |
348 | 0.83% | ▼ - 12.95 |
வெற்றி பெற்ற கட்சி | பாரிசான் நேசனல் | ||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம் [11] |
வேட்பாளர் | கட்சி | செல்லுபடி வாக்குகள் |
பெற்ற வாக்குகள் |
% | ∆% | |
---|---|---|---|---|---|---|
அகமத் சாகித் அமிடி (Ahmad Zahid Hamidi) |
பாரிசான் | 41,856 | 16,578 | 39.61% | - 11.76% ▼ | |
சம்சுல் இசுகந்தர் அக்கின் (Shamsul Iskandar Md. Akin) |
பாக்காத்தான் | - | 16,230 | 38.78% | - 1.19% | |
முகமது பைஸ் நமான் (Muhammad Faiz Na'aman) |
பெரிக்காத்தான் | - | 8,822 | 21.08% | + 21.08% | |
முகமது தவ்பிக் இசுமாயில் (Mohamad Tawfik Ismail) |
சுயேச்சை | - | 226 | 0.54% | + 0.54% |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)