பாகப்பிரிவினை | |
---|---|
இயக்கம் | ஏ. பீம்சிங் |
தயாரிப்பு | ஜி. என். வேலுமணி சரவணா பிலிம்ஸ் |
கதை | கதை சோலமலை |
இசை | விஸ்வநாதன் ராமமூர்த்தி |
நடிப்பு | சிவாஜி கணேசன் எம். ஆர். ராதா எம். என். நம்பியார் டி. எஸ். பாலையா எஸ். வி. சுப்பைய்யா பி. சரோஜாதேவி தாம்பரம் லலிதா எம். வி. ராஜம்மா சி. கே. சரஸ்வதி சி. டி. ராஜகாந்தம் |
வெளியீடு | அக்டோபர் 31, 1959 |
ஓட்டம் | . |
நீளம் | 16729 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாகப்பிரிவினை (Bhaaga Pirivinai) 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், எம். ஆர். ராதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1] இப்படம் 31 அக்டோபர் 1959 அன்று வெளியானது.[2] இது இந்தியில் கந்தன் (1965), தெலுங்கில் கலசி உண்டே கலடு சுகம் (1961), கன்னடத்தில் முறியாத மனே (1964), மலையாளத்தில் நிறைகுடம் (1977) ஆகிய பெயர்களில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.
வைத்தியலிங்கம், சுந்தரலிங்கம் ஆகியோர் சகோதரர்கள். அவர்கள் முறையே அகிலாண்டம், மீனாட்சியை மணந்துள்ளனர். வைத்தியலிங்கத்திற்குக் குழந்தைகள் இல்லை. சுந்தரலிங்கத்திற்கு கண்ணையன், மணி ஆகிய பிள்ளைகள் உள்ளனர். கண்ணையனுக்கு சிறுவயதில் ஏற்பட்ட ஒரு விபத்தால் இடது கை செயலிழந்து போகிறது. அவர் படிப்பறிவற்றவராகவும் உள்ளார். மணி ஆரோக்கியமானவராகவும், நன்கு படித்தவராகவும், சுந்தரலிங்கத்தின் குடும்பத்தில் உள்ளவர்களை வெறுக்கும் அகிலாண்டத்தின் செல்ல மகனாக மாறுகிறார்.
சூழ்ச்சியும், பண ஆசையும் உள்ள அகிலாண்டத்தின் சகோதரன் சிங்கப்பூர் சிங்காரம், சகோதர்களின் குடும்பத்துக்குள் நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்தி பாகப் பிரிவினை செய்யவைக்கிறார். அதே நேரத்தில் மணி சிங்காரத்தின் மகள் அமுதாவை மணந்ததால், கண்ணையனும் மணியும் பிரிந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும் சூழ்நிலையை ஏற்படுகிறது. கண்ணையன் பொன்னியை மணக்கிறார். சிங்காரம் அகிலாண்டத்தின் பணம் அனைத்தையும் மோசடி செய்து, நிறுவனத்தின் பணத்தைத் திருடி மணியை நிறுவனத்தில் சிக்க வைக்கிறார்.
ஒரு கட்டத்தில் கண்ணையனுக்கு, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி, செயலிழந்த அவரது கை குணமாகிறது. கண்ணையன் சிங்காரத்தின் சதியை முறியடித்து, குடும்பத்தை மீண்டும் ஒன்று சேர்க்கிறார்.
இப்படத்தை கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த ஜி. என். வேலுமணி தயாரித்தார். அவர் ஒரு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளராக உயரும் முன் ஆடை தயாரிப்பாளராக வாழ்க்கையைத் தொடங்கினார். படத்தின் படப்பிடிப்பு அடையாறில் உள்ள நெப்டியூன் ஸ்டுடியோவில் (பின்னர் சத்யா ஸ்டுடியோ) நடைபெற்றது. ஜி. விட்டல் ராவ் ஒளிப்பதிவு மேற்கொண்டார். பீம் சிங் தானே படத்தைத் தொகுப்பையும் மேற்கொண்டார். ஹரி பாபுவும் கஜபதியும் ஒப்பனையாளர்களாக இருந்தனர். இசையமைப்பாளர் ஜி. எஸ். மணி உதவி இசையப்பாளராக இருந்தார். மாதவன், சின்னிலால், சம்பத் ஆகியோர் நடனம் அமைத்தனர்.[4] கோபிசெட்டிபாளையத்தில் எடுக்கப்பட்ட முதல் படம் இது ஆகும்.[5]
இப்படத்திற்கு விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்தனர்.[6] பாடல் வரிகள் கண்ணதாசன், அ. மருதகாசி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோர் எழுதினர். "தாழையாம் பூ முடிச்சி" பாடலுக்கு விஸ்வநாதன்-ராமமூர்த்தி மூன்று இசைக் கருவிகளை மட்டுமே பயன்படுத்தினார்.[7][8] படத்தில் ஒரு தாலாட்டு பாடலை (ஏன் பிறந்தாய் மகனே) எழுத, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை எழுத முதலில் அணுகியபோது; தாலாட்டுக்கு பாடல் எழுதுவது தனக்கு வசதியாக இல்லாததால், பாடல் வரிகளை கண்ணதாசனைக் கொண்டு எழுதுமாறு தயாரிப்பாளரை வலியுறுத்தினார். நானே ராஜாவுக்குப் பிறகு சிவாஜி கணேசனுக்கும் கண்ணதாசனுக்கும் இடையில் மனத்தாபம் இருந்ததால் இருவரும் தொழில் ரீதியாக விலகி இருந்தனர். கண்ணதாசனைக் கொண்டு பாடல் எழுத வைக்கலாமா என்று தயாரிப்பாளர் கணேசனிடம் கேட்டபோது, அவர் அதற்கு ஒப்புக்கொண்டார்.[9]
பாடல் | பாடகர் | வரிகள் | நீளம் (நி:நொ) |
---|---|---|---|
"ஆனை முகத்தானே...பிள்ளையாரு கோயிலுக்கு" | டி. எம். சௌந்தரராஜன், பி. லீலா | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 04:24 |
"ஆட்டத்திலே பலவகை உண்டு" | ஏ. எல். ராகவன், கே. ஜமுனா ராணி | 03:18 | |
"ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே" | சீர்காழி கோவிந்தராஜன், எல். ஆர். ஈசுவரி | அ. மருதகாசி | 03:35 |
"பாலூற்றி உழவு...தேரோடும் இந்த சீரான" | டி. எம். சௌந்தரராஜன், பி. லீலா | கண்ணதாசன் | 06:52 |
"தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்" | பி. சுசீலா | 03:31 | |
"தாழையாம் பூ முடிச்சி" | டி. எம். சௌந்தரராஜன், பி. லீலா | 06:00 | |
"ஏன் பிறந்தாய் மகனே" | டி. எம். சௌந்தரராஜன் | 03:24 |
இத்திரைப்படம் 1960இல் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது (குடியரசுத் தலைவரின் வெள்ளிப் பதக்கம்) பெற்றது.[10].
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)