பாகான் ஜெர்மால் | |
---|---|
Bagan Jermal | |
ஆள்கூறுகள்: 5°32′0″N 100°22′0″E / 5.53333°N 100.36667°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பினாங்கு |
மாவட்டம் | வட செபராங் பிறை மாவட்டம் |
அரசு | |
• உள்ளூராட்சி | செபராங் பிறை நகராண்மைக் கழகம் |
• பாகான் நாடாளுமன்றத் தொகுதி | லிம் குவான் எங் (பாக்காத்தான் ஹரப்பான்-ஜனநாயக செயல் கட்சி) |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+8 (பயன்பாட்டில் இல்லை) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 12300 |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +6045 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண் | P |
இணையதளம் | http://www.mbsp.gov.my |
பாகான் ஜெர்மால் (ஆங்கிலம்: Bagan Jermal; (மலாய் Bagan Jermal; சீனம்: 峇眼惹玛; ஜாவி: باڬن جرمال) என்பது மலேசியா, பினாங்கு, வட செபராங் பிறை மாவட்டத்தில் பட்டவொர்த் பெருநகருக்குள் அமைந்துள்ள ஒரு நகரம். பாகான் ஜெர்மால் எனும் அதே பெயரில் பினாங்கு தீவிலும் ஒரு நகரம் உள்ளது.[1]
இந்த நகரத்திற்குத் தெற்கே பாகான் ஆஜாம் (Bagan Ajam); வடக்கே பாகான் லுவார் (Bagan Luar) நகரங்கள் உள்ளன. பாகான் ஜெர்மால் பகுதியில் அமைந்துள்ள கம்போங் பாகான் ஜெர்மால் (Kampung Bagan Jermal) என்ற கிராமத்தின் பெயரால் இந்த இடம் அழைக்கப்படுகிறது.
கம்போங் குபாங் புவாயா (Kampung Kubang Buaya), கம்போங் பாயா (Kampung Paya), கம்போங் காஜா (Kampung Gajah) மற்றும் கம்போங் கஸ்தாம் (Kampung Kastam) ஆகியவை அருகிலுள்ள பிற கிராமங்கள்.
மலேசியாவின் தேர்தல் ஆணையம் (Election Commission of Malaysia) வழங்கிய புள்ளிவிவரங்களின்படி, பாகான் ஜெர்மால் தொகுதியில் மொத்தம் 24,608 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 68% சீனர்கள்; 17% மலாய்க்காரர்கள் மற்றும் 15% இந்தியர்கள்.