பாகிரதி தேவி Bhagirathi Devi | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர் பீகார் | |
பதவியில் 2010 | |
முன்னையவர் | சந்திர மோகன் ராய் |
தொகுதி | இராம் நகர் |
பதவியில் 2000–2010 | |
முன்னையவர் | போலா இராம் தூபானி |
பின்னவர் | செயல்பாட்டில் இல்லை |
தொகுதி | சிக்கார்பூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 12 சனவரி 1954 நர்காட்டியாகஞ்ச், மேற்கு சம்பாரண் மாவட்டம், பீகார் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | மாமிகான் ரவுத் |
பிள்ளைகள் | 6 |
வாழிடம் | சிக்கார்பூர், மேற்கு சம்பாரண் மாவட்டம், பீகார் |
பணி | அரசியல்வாதி சமூக சேவகர் |
பாகிரதி தேவி (பிறப்பு 12 ஜனவரி 1954) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தற்போது பீகார் மாநிலம் ராம்நகர் சட்டமன்றத் தொகுதியின்சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[1][2] பகரிதி தேவி மேற்கு சம்பராண் மாவட்டம் நர்கதியாகஞ்சில் உள்ள தொகுதி மேம்பாட்டு அலுவலகத்தில் ₹800 (US$10) சம்பளத்துடன் துப்புரவுப் பணியாளராகத் தனது வாழ்க்கையைத் துவங்கினார்.
பாகிரதி தேவி பீகாரில் உள்ள நர்கதியாகஞ்ச் பகுதியைச் சேர்ந்த மகாதலித் குடும்பத்தைச் சேர்ந்தவர். பாகிரதி மீண்டும் 2015 பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் ராம்நகர் சட்டமன்றத் தொகுதியில் இந்தியத் தேசிய காங்கிரசு வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஏப்ரல் 2015-ல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் கீழ் ஊதியம் வழங்கப்படாத பிரச்சினை தொடர்பாகப் பீகார் சட்டமன்றத்தில் பூஜ்ஜிய நேரத்தில் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின் அன்னு சுக்லாவுடன் பாகிரதி தேவி வாதிட்டார்.[3] பாகிரதி தேவி ஆரம்பத்தில் 2000 மற்றும் 2005-ல் தற்பொழுது செயல்படாத ஷிகர்பூரில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். இவர் ரயில்வே ஊழியரான மாமிகான் ரவுத்தை மணந்தார்.
2019ஆம் ஆண்டில், பாகிரதிக்கு இந்திய அரசு பத்மசிறீ விருது வழங்கியது.[4]
பாகிரதி அங்கன்வாடி கேந்திரா (குழந்தை பராமரிப்பு மையங்கள்) மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள தனது வீட்டில் அலுவலகத்தைத் திறக்க அனுமதித்தார். நர்கதியாகஞ்ச் தொகுதியில் மகிளா சங்கதன்களை (பெண்கள் குழுக்கள்) உருவாக்கி, பெண்களை ஒருங்கிணைத்து, குடும்ப வன்முறை, தலித்துகளுக்கு எதிரான வன்முறை மற்றும் நியாயமான ஊதியம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பின்னர் இவர் தனது அரசியல் செயல்பாட்டை மாவட்டத்தில் உள்ள மற்ற தொகுதிகளுக்கும் விரிவுபடுத்தினார்,