பாக்காத்தான் அரப்பான் Pakatan Harapan Alliance of Hope | |
---|---|
![]() | |
சுருக்கக்குறி | PH |
தலைவர் | அன்வர் இப்ராகீம் |
தலைவர் | வான் அசிசா வான் இஸ்மாயில் |
தலைவர் | அன்வர் இப்ராகீம் |
துணை தலைவர்கள் | அந்தோனி லோக் முகமது சாபு டத்தோ வில்பரட் தாங்காவ் |
உதவி தலைவர்கள் | சோங் சியெங் சென் சலாவுதின் ஆயுப் எம். குலசேகரன் கிறிஸ்டினா லிவ்[1] |
குறிக்கோளுரை | புதிய மலேசியா |
தொடக்கம் | 22 செப்டம்பர் 2015 |
முன்னர் | பாக்காத்தான் ராக்யாட் |
மாணவர் அமைப்பு | பக்காத்தான் அரப்பான் மாணவர் அனி |
இளைஞர் அமைப்பு | பாக்காத்தான் அரப்பான் இளைஞர் அனி[2][3] |
உறுப்பினர் | ஜனநாயக செயல் கட்சி மக்கள் நீதிக் கட்சி அமாணா (தேசிய நம்பிக்கை கட்சி) ஐக்கிய பாசோக்மோமோகான் கடாசான் மூருட் அமைப்பு இண்ட்ராப் |
கொள்கை | சமூக மக்களாட்சி சமூக தாராளவாதம் விழைதல் அரசியல் இயக்கத்திற்கு சீர்திருத்தவாதம் |
அரசியல் நிலைப்பாடு | மையம், இடது |
நிறங்கள் | சிவப்பு வெள்ளை |
மேலவைத் தொகுதிகள் | 4 / 70 |
மக்களவைத் தொகுதிகள் | 104 / 222
|
சட்டமன்றத் தொகுதிகள் | 194 / 587
|
தேர்தல் சின்னம் | |
![]() | |
கட்சிக்கொடி | |
![]() | |
இணையதளம் | |
pakatanharapan |
பாக்காத்தான் அரப்பான் எனும் நம்பிக்கை கூட்டணி (ஆங்கிலம்: Alliance of Hope; மலாய்: Pakatan Harapan; சீனம்: 马来西亚民主联合阵线) என்பது மலேசியாவின் அரசியல் கூட்டணிகளில் ஒன்றாகும். 2015-ஆம் ஆண்டில் பாக்காத்தான் ராக்யாட் கூட்டணிக்குப் பின் உருவாக்க்கப்பட்ட மலேசிய அரசியல் கூட்டணியாகும். 2022-ஆம் ஆண்டில் இருந்து மலேசிய ஒற்றுமை அரசாங்கத்தில் (Ruling Coalition) பாக்காத்தான் அரப்பான் கூட்டணி ஓர் அங்கமாக செயல்பட்டு வருகிறது.
மலேசியாவின் 14-வது மலேசியப் பொதுத் தேர்தலுக்கு பின்னர் மலேசியாவின் 14-ஆவது நாடாளுமன்ற உறுப்பினர்கள் (Members of the Dewan Rakyat, 14th Malaysian Parliament) தங்களின் கட்சி ஆதரவுகளை மாற்றியதால் 2022-ஆம் ஆண்டு மலேசியாவில் அரசியல் நெருக்கடி (2020 Malaysian Political Crisis) ஏற்பட்டது.
அதன் பின்னர் 2022-ஆம் ஆண்டு உடனடிப் பொதுத் தேர்தல் (Snap General Election) நடைபெற்றது. இறுதியில் மலேசியாவில் ஓர் ஒற்றுமை அரசாங்கத்தை (National Unity Government) உருவாக்குவதற்கும் அந்த அரசியல் நெருக்கடி வழிவகுத்துக் கொடுத்தது.
2015 செப்டம்பர் 22-ஆம் தேதி அமாணா (தேசிய நம்பிக்கை கட்சி)யும், ஜனநாயக செயல் கட்சியும், மக்கள் நீதிக் கட்சியும் ஒன்றிணைந்து, பாக்காத்தான் அரப்பான் கூட்டணியை உருவாக்கின.பின் 2017 ஆம் ஆண்டில் மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி கூட்டணியில் ஒன்றிணைந்தது. 2018-ஆம் ஆண்டில் இந்து உரிமைகள் போராட்டக் குழு அல்லது இண்ட்ராப் பாக்காத்தான் அரப்பான் கூட்டணியை ஆதரித்தது.
14-வது மலேசியப் பொதுத் தேர்தல் (14th Malaysian general election) மலேசியாவின் 140-ஆவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 2018 மே 9 அன்று நடத்தப்பட்டது.[5] மக்களவையின் 222 இடங்களுக்கும், 12 மாநில சட்டமன்றங்களின் 505 இடங்களுக்கும் தேர்தல்கள் இடம்பெற்றன. 13-வது நாடாளுமன்றம் 2018 ஏப்ரல் 7 இல் கலைக்கப்பட்டது.
இத்தேர்தலில் மலேசிய நாடாளுமன்றத்தின் முக்கிய எதிர்க்கட்சிக் கூட்டணியான பாக்காத்தான் அரப்பான் வெற்றி பெற்றது. இக்கூட்டணி மக்களவையில் 113 இடங்களைக் கைப்பற்றி, சாதாரணப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. இக்கூட்டணி அரசுக்கு 8 இடங்களை வென்ற சபா மரபுக் கட்சி தனது ஆதரவை வழங்க முன்வந்தது.
மலேசியா 1957-இல் விடுதலை பெற்ற பின்னர் 61 ஆண்டுகளாகப் பதவியில் இருக்கும் ஆளும் தேசிய முன்னணி கூட்டணிக்கு இத்தேர்தல் பெரும் தோல்வியாகக் கருதப் படுகிறது. 92 வயதான மகாதீர் பின் முகமது புதிய பிரதமராகப் பதவியேற்றார். உலகின் மிக வயதான அரசுத் தலைவர் என்ற பெருமையும் இவரைச் சேருகிறது. சிறைப்படுத்தப் பட்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகீம் பொது மன்னிப்புப் பெற்று விடுதலை ஆகும் பட்சத்தில், அவருக்கு பிரதமர் பதவியை விட்டுக் கொடுப்பதாக மகாதீர் அறிவித்தார்.[6]
24 பிப்ரவரி 2020 அன்று, மகாதீர் பின் முகமது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். ஆளும் பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணியில் இருந்து 26 உறுப்பினர்களைக் கொண்ட பிபிபிஎம் விலகியது. கூடுதலாக, பிகேஆரைச் சேர்ந்த 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியில் இருந்து ராஜினாமா செய்து சுயேச்சையான கூட்டணியை உருவாக்கினர். இதன் மூலம் பாக்காத்தான் ஹரப்பான் அரசு கவிழ்ந்தது. மாநில அளவில், பாக்காத்தான் ஹரப்பான் அரசு ஜொகூர், மலாக்கா, பேராக் மற்றும் கெடா மாநிலங்களிலும் கவிழ்ந்தது,
பாக்காத்தான் ஹரப்பானின் அடிப்படை கட்டமைப்பு கொள்கைகள்:
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)