பாக்கித்தானில் உடல் பருமன் (Obesity in Pakistan) என்பது கடந்த சில ஆண்டுகளாகவே கவலையை ஏற்படுத்தி வரும் ஓர் உடல்நலப் பிரச்சினையாகும். நகரமயமாக்கல், ஆரோக்கியமற்ற நிலை, சமையலில் எண்ணெய் மற்றும் கொழுப்புகள் அதிகம் நிறைந்த உணவு, மாறிவரும் வாழ்க்கை முறை ஆகியவை நாட்டில் உடல் பருமனுக்கு பங்களிக்கும் மூல காரணங்களாகும்.
பாக்கித்தான் அதிக எடை கொண்ட மக்கள் தொகையின் அடிப்படையில் 194 நாடுகளில் 165 ஆவது இடத்தில் உள்ளது [1] இந்த விகிதம் தோராயமாக மற்ற ஆய்வுகளுடன் ஒத்துப்போகிறது. நான்கில் ஒரு பாக்கித்தானியப் பெரியவர்கள் அதிக எடையுடன் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.[2] பாக்கித்தானில் அதிக எடை கொண்டவர்கள் பிரச்சனை குறிப்பாக பெரியவர்களிடையே மிகவும் அதிகமாக உள்ளது.[3]
பாக்கித்தானில் உள்ள பெரிய நகரங்களில் வசிக்கும் மக்கள் கிராமப்புறங்களில் உள்ளவர்களை விட உடல் பருமனால் ஏற்படும் அபாயங்களுக்கு ஆளாகிறார்கள். பெரிய நகரங்களைப் போலவே, துரித உணவு மற்றும் குளிர்பானம் போன்ற ஆரோக்கியமற்ற உணவு உட்கொள்வது அனைத்துப் பகுதிகளிலும் பொதுவானதாகும். இந்நாட்டில் ஆண்களை விட பெண்களுக்கு உடல் பருமன் அதிகமாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பும் சுட்டிக் காட்டுகிறது. [4]தெற்காசியாவிலேயே பாக்கித்தானில் சர்க்கரை நோயாளிகள் அதிகம் உள்ளனர். [5]
காகசியர்களை விட தெற்காசிய மக்களுக்கு கொழுப்பு மிகவும் ஆபத்தானதாகும். ஏனெனில் கொழுப்பு தோலுக்கு பதிலாக கல்லீரல் போன்ற உறுப்புகளில் ஒட்டிக்கொள்ளும் [6]