பாக்கித்தானில் தமிழர்கள் ஒரு சிறிய சமூகமாக உள்ளனர்.
1947 ஆம் ஆண்டில் சுதந்திரத்திற்குப் பிறகு சில முஸ்லிம் தமிழர்கள் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டிலிருந்து கராச்சிக்கு குடியேறினர். இந்த முஸ்லிம் தமிழர்கள் உருது மொழி பேசும் முஹாஜிர் சமூகத்துடன் ஒருங்கிணைந்துள்ளனர். [1] பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு ஆட்சியின்போது கராச்சி உருவாக்கப்பட்ட 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்தே சில தமிழர்களும் பாக்கித்தானில் இருந்தனர்.
இலங்கை உள்நாட்டு யுத்தம் நடந்தப்போது இலங்கைத் தமிழர் இங்கு குடியேறினார்கள். இதில் பெரும்பாலானோர் இந்துக்களாக இருந்தனர். [2] ஜின்னா முதுகலை மருத்துவ மையத்தின் பின்னால் உள்ள மதராசி பரா பகுதியில் 100 தமிழ் இந்து குடும்பங்கள் வாழ்ந்து வருகினறனர். ஸ்ரீ ராமா பிர் மந்திர் கோயில் இந்த இடத்தில் ஒரு கட்டுமான நிறுவனத்தால் இடிக்கப்பட்டது. இந்த கோயில் கராச்சியில் மிகப்பெரிய தமிழ் இந்து கோவிலாக இருந்தது. [3] மேலும் த்ரிக் சாலை மற்றும் கோரங்கி ஆகியவையும் தமிழ் மக்களைக் கொண்டுள்ளன.
கராச்சியில் குறைந்த எண்ணிக்கையிலான தமிழ் கிறித்தவர்களும் உள்ளனர். 2019 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் வரையிலான கணக்குப்படி, பாகித்தானுக்கு ஒவ்வொரு மாதமும் 30 தபால்கள் தமிழ்நாட்டிலிருந்து வருவதாக தெரிவிக்கபட்டுள்ளது. [4]
தமிழ் சமூகத்தில் கத்தோலிக்கத்தவரும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். முன்னாள் பிரதமர் யூசுப் ராசா கிலானியின் பள்ளி ஆசிரியரான இம்மானுவேல் நிக்கோலஸ் இலங்கைத் தமிழராவார். குவெட்டாவில் உள்ள பிஷப் விக்டர் ஞானப்பிரகாசம் பாகிஸ்தானின் புகழ்பெற்ற தமிழ் கத்தோலிக்க சமூகத்தில் ஒருவராவார். [5]
{{cite web}}
: Missing or empty |url=
(help) Retrieved 9 July 2013.