![]() | |
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | ஆகத்து 14, 1947 |
தலைமையகம் | குவெட்டா, பாக்கிஸ்த்தான் |
பணியாட்கள் | ~1,382 |
ஆண்டு நிதி | ₨. 282.5 மில்லியன் |
அமைப்பு தலைமை |
|
மூல அமைப்பு | பிரித்தானிய புவியமைப்பியல் அளவை நிறுவனம் |
முக்கிய ஆவணம் |
|
வலைத்தளம் | www |
பாக்கித்தான் புவியமைப்பியல் அளவை நிறுவனம் (சுருக்கம்:பா.பு.அ) (The Geological Survey of Pakistan ( GSP), என்பது பாக்கித்தான் நாட்டின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தனித்துவ மற்றும் தன்னாட்சி நிறுவனம் ஆகும். புவி அறிவியல் அறிவை மேம்படுத்துவதும், அதிகாரப்பூர்வமான வரைபடங்கள் மற்றும் புவியியல் அளவை மீதான திட்டமிட்ட ஆய்வுகள் நடத்துவதும் இத்துறையின் முக்கியப்பணிகளாகும்[1].
தங்களுடைய நாட்டின் நிலத்தோற்றத்தை பாக்கித்தான் புவியமைப்பியல் அளவைத் துறையின் அறிவியலாளர்கள் முற்றிலுமாக ஆய்வு செய்தார்கள். பாக்கித்தானின் இயற்கை வளங்கள் மற்றும் இயற்கை சீற்றங்கள் நாட்டை அச்சுறுத்தும் வகையில் இருப்பதை அறிந்தனர். புவியமைப்பியல் ஆய்வுகளைத் தவிர்த்து உயிரியல், பொறியியல், நீரியல், வேதியியல் மற்றும் இயற்பியல் [2] போன்ற அறிவியல் துறைகளும் இத்துறையுடன் இணைந்து ஆய்வு செய்யப்பட வேண்டிய துறைகளாகும். உண்மையறியும் நோக்கம் கொண்ட தொடர்ச்சியான ஆய்வுகளால் கனிமங்களைக் கண்டறியவும் தாதுக்களில் இருந்து பிரித்தெடுக்கவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன[1].
பாக்கித்தான் புவியமைப்பியல் அளவையின் தலைமை அலுவலகம் குவெட்டா நகரிலும், இதன் பிரதான அலுவலகம் இசுலாமாபாத்திலும், நாடு முழுவதிலும் ஆங்காங்கே மண்டல அலுவலகங்களும் அமைக்கப்பட்டுள்ளன. டாக்டர் இம்ரான்கான் பாக்கித்தான் புவியமைப்பியல் அளவையின் தற்போதைய பொது இயக்குநராக செயல்படுகிறார்.[3]
இந்தியாவில் பிரித்தானியப் பேரரசின் எல்லைகளை அறிந்து கொள்வதற்காக புவியமைப்பியல் அளவை நிறுவனத்தை அமைக்க ஐக்கிய இராச்சியத்தின் அரசாங்கம் 1836-1851 ஆண்டு காலத்தின் தொடக்கத்திலேயே முடிவு செய்தது. ஆங்கிலேய புவியமைப்பியல் நிபுணர் டேவிட் வில்லியம்சு, இந்திய புவியமைப்பியல் அளவை நிறுவனத்தை பின்னாளில் தொடங்கினார்.[4]
ஆங்கிலேயரிடம் இருந்து பாக்கித்தான் சுதந்திரம் பெற்றபிறகு, இந்திய புவியமைப்பியல் அளவை நிறுவனத்தின் வடமேற்கு கிளை உடமைகள் மற்றும் பணியாளர்களுடன் பாக்கித்தான் புவியமைப்பியல் அளவை நிறுவனமாக உருவானது.[5]
பாக்கித்தான் புவியமைப்பியல் அளவை நிறுவனம் தொடங்கப்பட்டபோது மூத்த விஞ்ஞானியாக இருந்த எச்.எல். குரூக்சாங்க் தலைமையில் ஆறு நிலவியலாளர்களும் இரண்டு வேதியியலாளர்களும் பணிபுரிந்தனர். உடனடியாக எச்.எல். குரூக்சாங்க் நிறுவனத்தின் முதலாவது இயக்குநராக நியமிக்கப்பட்டு 1955 ஆம் ஆண்டுவரை அவரே இயக்குநராகவும் செயல்பட்டார். இவரது தலைமையின் கீழ் 1948 ஆம் ஆண்டில் தொழிநுட்ப நிலவியலாளர்கள் எண்ணிக்கை 30 ஆக உயர்த்தப்பட்டது. தொடக்கக் காலத்தில் நீரியல் மற்றும் பொறியியல் துறைகளில் முன்னோடிப் பணிகளில் இந்நிறுவனம் ஈடுபட்டது. பின்னர் இம்முயற்சிகள் இராணுவத்தின் பொறியியல் பிரிவுக்கு மாற்றப்பட்டது.[6] 1949-55 ஆம் ஆண்டு காலத்தில் இந்நிறுவனம் அரசாங்கத்தின் உதவியோடு பாரம்பரிய தளங்கள் தொடர்பான ஆய்வுகளில் கொழும்பு திட்டத்தின் வழியாக கடுமையாக பணியாற்றியது. இந்த நடவடிக்கைகள் காரணமாக நிறுவனம் தன்னுடைய அறிவியல் செயல்படுகளையும் திறனையும் அதிகரித்துக் கொண்டு, பாக்கித்தான் அரசின் முன்னோடி அறிவியல் நிறுவனமாக வளர்ந்தது[5]. 1955 ஆம் ஆண்டு ஆங்கில நிலவியலாளர் இ.ஆர்.கி பாக்கித்தான் புவியமைப்பியல் அளவை நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார். நிறுவனத்தின் பொறியியல், ஒளியியல் சார்ந்த புவியளவையியல் பிரிவுகளை பெருமளவுக்கு விரிவுபடுத்தினார். திட்டமிட்ட செய்தி இதழ்கள் வெளியிடுவதையும் தொடங்கி வைத்தார். 1959 ஆம் ஆண்டில் குவெட்டாவில் புதிய தலைமை அலுவலகம் கட்டப்பட்டு பாக்கித்தானைச் சேர்ந்த டாக்டர் என்.எம்.கான் நிறுவனத்தின் இயக்குநராக பதவியேற்றார்.[5]
{{cite web}}
: |last=
has generic name (help); Check date values in: |archive-date=
(help)
{{cite book}}
: |last=
has generic name (help)CS1 maint: extra punctuation (link) CS1 maint: multiple names: authors list (link)
{{cite web}}
: |last=
has generic name (help); Check date values in: |archive-date=
(help)CS1 maint: unfit URL (link)