பாக்கியசிறீ தீப்சே (Bhagyashree Thipsay, பிறப்பு: ஆகத்து 4, 1961) என்பவர் பெண்கள் சதுரங்க கிராண்டுமாசுட்டர் பட்டம் பெற்ற ஒர் இந்திய சதுரங்க விளையாட்டு வீரர் ஆவார். இவர் 1985, 1986, 1988, 1991[1] மற்றும் 1994 ஆம் ஆண்டுகளில் ஐந்து முறை இந்தியப் பெண்கள் வாகையாளர் பட்டத்தை வென்றார், 1991 ஆம் ஆண்டு ஆசிய பெண்கள் வாகையாளர் பட்டத்தையும் வென்றார்.[1]
1984 ஆம் ஆண்டு இங்கிலாந்து பெண்கள் சாம்பியன் பட்டத்தை மகாராட்டிராவைச் சேர்ந்த வசந்தி உன்னியுடன் இணைந்து கூட்டாக வென்றார்.[2][3] 2000 ஆம் ஆண்டில் உலக பெண்கள் சதுரங்க சாம்பியன் போட்டியில் விளையாடி பெங்கு சாவோகின்னிடம் முதல் சுற்றில் தோல்வியடைந்தார்.
இவர் பத்மசிறீ மற்றும் அருச்சுனா விருது ஆகிய விருதுகளைப் பெற்றார். பிறகு சதுரங்க கிராண்டுமாசுட்டர் பிரவீன் தீப்சேவைத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் பாக்கியசிறீ சாதி தீப்சே என்று பெயரை மாற்றிக் கொண்டார்.[4] இவர் மும்பை, ஐடிபிஐ வங்கியில் ஒரு மேலாளராகப் பணிபுரிகிறார்.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)