![]() | ||
![]() ![]() ![]() |
பாக்ஸ்ஃபயர் (Foxfire), தேவதை தீ அல்லது சிம்பன்சி தீ என்றும் அழைக்கப்படுவது, மட்கும் மரத்தில் இருந்து உருவாகும் சில வகை பூஞ்சைகளால் உருவாக்கப்பட்ட உயிரொளிர்வு ஆகும். நீல- பச்சை ஒளிர்வுக்கு லூசிஃபெரேஸ், ஒரு ஆக்ஸிஜனேற்ற நொதி காரணமாக உள்ளது, இது லூசிஃபெரினுடன் வினைபுரியும் போது ஒளியை வெளியிடுகிறது. இந்த ஒளி உமிழும் பூஞ்சைகள் குறித்து பண்டைய காலங்களிலிருந்து அறியப்படுகிறது. என்றாலும் இது ஆதாரபூர்வமாக 1823 இல் தீர்மானிக்கப்பட்டது.
பாக்ஸ்ஃபயர் என்பது மட்கும் மரங்களில் இருக்கும் சிலவகை பூஞ்சைகளால் உருவாக்கப்படும் உயிரொளிர்வு ஆகும. இது பனெல்லஸ் ஸ்டிப்டிகஸ், ஓம்பலோட்டஸ் ஒலியாரியஸ், ஓம்பலோட்டஸ் நிடிஃபார்மிஸ் உள்ளிட்ட பல பூஞ்சை உயிரினங்களில் நிகழ்கிறது. நீல-பச்சை ஒளிர்வானது இதற்கு காரணம் லூசிஃபெரேஸ், என்னும் ஒரு ஆக்ஸிஜனேற்ற நொதி ஆகும். இது லூசிஃபெரினுடன் வினைபுரியும் போது ஒளியை வெளியிடுகிறது. பூச்சிகளைக் கவர்ந்து இனப்பெருக்கம் செய்யவே இது ஒளிர்கிறது என்று சிலர் நம்புகிறார்கள், அல்லது தன்னை உண்ணும் விலங்குகளுக்கு எச்சரிக்கைவிடுக்கவே இவ்வாரு ஒளிர்வதாகவும் சொல்லப்படுகிறது, சில நச்சு அல்லது விரும்பத்தகாத விலங்கு இனங்கள் பிரகாசமான வண்ணங்களில் காட்சியளிப்பது போன்றது இது ஆகும்.[1] பொதுவாக இதில் இருந்து வரும் ஒளியின் வெளிச்சம் மிகவும் மங்கலானதாக இருந்தாலும், சில சந்தர்ப்பங்களில் புத்தகம் படிக்கக்கூடிய அளவுக்கு போதுமான வெளிச்சம் அரிதாக கிடைப்பது உண்டு.[2]
பாக்ஸ்ஃபைரின் குறித்த மிகப் பழமையான பதிவானது கி.மு., 382 இல் அரிசுட்டாட்டில் எழுதியது ஆகும். இந்த குறிப்புகளிள் நெருப்பைப் போலன்றி, தொடுவதற்கு குளிர்ச்சியாக இருந்த ஒரு ஒளியைக் குறிக்கின்றன. ரோமானிய சிந்தனையாளர் மூத்த பிளினி ஆலிவ் தோப்புகளில் ஒளிரும் மரத்தையும் குறிப்பிட்டுள்ளார்.[3]
ஆரம்பகால நீர்மூழ்கிக் கப்பல்களில் காற்றழுத்தமானி மற்றும் திசைகாட்டி ஆகியவற்றின் ஊசிகளை ஒளிரச் செய்ய பாக்ஸ்ஃபயர் பயன்படுத்தப்பட்டது.[4]
"பாக்ஸ்ஃபயர்" என்ற பெயரில் உள்ள பாக்ஸ் என்ற சொல்லானது பழைய பிரஞ்சு மொழிச் சொல்லான fols இருந்து தோன்றியது fols என்ற சொல்லின் பொருள் "நரி" என்ற பெயரைக் காட்டிலும் "பொய்" என்று பொருள்படும்.[5] இருப்பினும், இதுபோன்ற நெருப்புகளுடன் நரிகளின் தொடர்பு பரவலாக உள்ளது, மேலும் இது ஜப்பானிய நாட்டுப்புறக் கதைகளிலும் குறிப்பிடப்படுகிறது.