பாங்கி (ஆங்கிலம்: Bangi அல்லது Bangi Lama; மலாய்: Pekan Bangi) என்பது மலேசியா, சிலாங்கூர், உலு லங்காட் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். காஜாங் நகரில் இருந்து 11 கி.மீ.; நீலாய் நகரில் இருந்து இருந்து 13 கி.மீ.; தொலைவில் அமைந்துள்ளது.[1]
பாங்கி என்பது வேறு; பண்டார் பாரு பாங்கி என்பது வேறு. பண்டார் பாரு பாங்கி நகரம் அண்மையில் உருவாக்கப்பட்ட ஒரு பெரிய நகரமாகும். பண்டார் பாரு பாங்கிக்கு வடக்கே சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில், இந்த பாங்கி நகரம் அமைந்துள்ளது; மற்றும் காஜாங் நகரத்திற்கு மிக அருகிலும் உள்ளது.[2]
பாங்கி நகரம் செம்பனை தோட்டங்களால் சூழப்பட்டுள்ளது. அவற்றில் பெரும்பாலான தோட்டங்கள், கடந்த 20 ஆண்டுகளில் நகர்ப் புறங்களாக மாற்றப்பட்டு உள்ளன. இந்த நகரம் கம்போங் பாங்கி, கம்போங் பகாகியா, கம்போங் பத்து லீமா, கம்போங் ரிஞ்சிங் எனும் சிறிய கிராமங்களால் சூழப்பட்டுள்ளது.
சாலையின் இருபுறமும் கடை வீடுகள் கொண்ட முக்கிய சாலை உள்ளது. இந்தக் கடைவீடுகளுக்குப் பின்னால், 30 ஏக்கர் செம்பனை - ரப்பர் தோட்டம்; குடியிருப்புகளாக மாற்றப்பட்டன.
அந்த இடம் இப்போது கம்போங் அமான் (Kampong Aman) என்று அழைக்கப்படுகிறது. மலேசிய தேசிய பல்கலைக்கழகத்திற்கு (Universiti Kebangsaan Malaysia) சொந்தமான மலேசிய பனை எண்ணெய் வாரிய ஆராய்ச்சி நிலையமும் (Malaysian Palm Oil Board) பாங்கி நகரத்திற்கு அருகில் அமைந்துள்ளது.[3]
சாலை | ||
---|---|---|
பண்டார் பாரு பாங்கி | B11 |
10.6 |
செமினி | B11 |
10.3 |
டெங்கில் | B11 |
17.5 |
புத்ராஜெயா | B11 |
22.8 |
காஜாங்-சிரம்பான் நெடுஞ்சாலை | 10.4 |