பாங்கி (P102) மலேசிய மக்களவைத் தொகுதி சிலாங்கூர் | |
---|---|
Bangi (102) Federal Constituency in Selangor | |
மாவட்டம் | உலு லங்காட் மாவட்டம் சிலாங்கூர் |
வாக்காளர் தொகுதி | பாங்கி தொகுதி |
முக்கிய நகரங்கள் | பாங்கி, சிலாங்கூர்; பண்டார் பாரு பாங்கி காஜாங் |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 2018 |
கட்சி | பாக்காத்தான் |
இதற்கு முன்னர் நடப்பில் இருந்த தொகுதி | (2022) |
மக்களவை உறுப்பினர் | சயரெட்சன் ஜோகான் (Syahredzan Johan) |
வாக்காளர்கள் எண்ணிக்கை | 311,469 (2022)[1] |
தொகுதி பரப்பளவு | 184 ச.கி.மீ[2] |
இறுதி தேர்தல் | பொதுத் தேர்தல் 2022[3] |
பாங்கி மக்களவைத் தொகுதி[4] (மலாய்: Kawasan Persekutuan Bangi; ஆங்கிலம்: Bangi Federal Constituency; சீனம்: 万宜国会议席) என்பது மலேசியா, சிலாங்கூர், உலு லங்காட்மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P102) ஆகும்.
பாங்கி மக்களவைத் தொகுதி 2018-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் 2018-ஆம் ஆண்டில், அதன் முதலாவது மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. பின்னர், இறுதியாக 2022-ஆம் ஆண்டில், பொதுத் தேர்தல் நடைபெற்றது.
அத்துடன் 2018-ஆம் ஆண்டில் இருந்து பாங்கி மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
பண்டார் பாரு பாங்கி, மலேசியத் தலைநகரமான கோலாலம்பூரில் இருந்து 25 கி.மீ., தொலைவில்; காஜாங் நகரத்திற்கும் புத்ராஜெயா நகரத்திற்கும் இடையில் அமைந்துள்ளது.[5]
முன்பு பண்டார் பாரு பாங்கியில், மலேசியாவிலேயே மிகப் பெரிய ரப்பர் தோட்டங்களில் ஒன்றான பிராங் பெசார் ரப்பர் தோட்டம் இருந்தது. பண்டார் பாரு பாங்கி உருவாக்கத்தின் போது அந்தத் தோட்டமும்; பண்டார் பாரு பாங்கி மேம்பாட்டுத் திட்டங்களுக்காகக் கொள்முதல் செய்யப்பட்டது. மேலும் தெற்கே அமைந்துள்ள சிறிய நகரமான பாங்கியின் பெயரால் இந்த நகரத்திற்கும் பண்டார் பாரு பாங்கி என பெயரிடப்பட்டது.[6]
சாலை/நகரம் | ||
---|---|---|
பண்டார் பாரு பாங்கி | B11 |
10.6 |
செமினி | B11 |
10.3 |
டெங்கில் | B11 |
17.5 |
புத்ராஜெயா | B11 |
22.8 |
காஜாங்-சிரம்பான் நெடுஞ்சாலை | 10.4 |
பாங்கி மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (2018 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
(செர்டாங்; உலு லங்காட் மக்களவைத் தொகுதிகளில் இருந்து உருவாக்கப்பட்டது) | ||||
14-ஆவது மக்களவை | P102 | 2018–2022 | ஓங் கியான் மிங் (Ong Kian Ming) |
பாக்காத்தான் அரப்பான் (ஜனநாயக செயல் கட்சி) |
15-ஆவது மக்களவை | 2022–தற்போது | சயரெட்சன் ஜோகான் (Syahredzan Johan) |
பொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
303,430 | - | - |
வாக்களித்தவர்கள் (Turnout) |
246,795 | 81.34% | ▼ 6.99 |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
244,291 | 100.00% | - |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
574 | - | - |
செல்லாத வாக்குகள் (Total Rejected Ballots) |
1931 | - | - |
பெரும்பான்மை (Majority) |
69,701 | 28.53% | ▼ 15.46 |
வெற்றி பெற்ற கட்சி: | பாக்காத்தான் | ||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[7] |
சின்னம் | வேட்பாளர் | கட்சி | வாக்குப்பதிவு | % | ∆% |
---|---|---|---|---|---|
சயரெட்சன் ஜோகான் (Syahredzan Johan) |
பாக்காத்தான் (PH) | 141,568 | 57.95% | -7.65 ▼ | |
முகமது நசுருல் அக்கீம் நசீர் (Muhammad Nazrul Hakim Md. Nazir) |
பெரிக்காத்தான் (PN) | 71,867 | 29.42% | +29.42 | |
கோ கீ லீ (Hoh Hee Lee) |
பாரிசான் (BN) | 25,685 | 10.51% | -2.13 ▼ | |
அனுவார் சாலே (Annuar Salleh) |
உள்நாட்டு போராளிகள் கட்சி (GTA) |
3,148 | 1.29% | +1.29 | |
சி சி மெங் (Chee Chee Meng) |
மலேசிய மக்கள் கட்சி (Parti Rakyat Malaysia) |
752 | 0.31% | +0.27 | |
ஜமால் இசாம் அசிம் (Jamal Hisham Hashim) |
சுயேச்சை | 676 | 0.28% | +0.28 | |
முகமது பௌசி அசிம் (Muhammad Fauzi Hasim) |
சுயேச்சை | 401 | 0.16% | +0.16 | |
சுதன் மூக்கையா (Suthan Mookaiah) |
சுயேச்சை | 194 | 0.08% | +0.08 |